சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மொழி மாற்றம் சரியாக நடக்காமல் போனதால் எல்ஐசியின் இணையதளத்தின் முகப்பு இந்தியில் இருந்ததாகவும் தற்போது அது சரியாகி விட்டதாகவும் எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளம் திடீரென முழுமையாக இந்திக்கு மாறிக் காணப்பட்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக தென்னிந்தியாவில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது அப்பட்டமான இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டிலிருந்து முதல் குரல் ஒலித்தது. முதல் எதிர்ப்பை மதுரை எம்.பி. சு வெங்கடேசன் பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் என பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.+
இது மொழி கலாச்சார திணிப்பு, மொழி சர்வாதிகாரம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியிருந்தார். இந்த நிலையில் இந்த குழப்பத்திற்கு தற்போது எல்ஐசி நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எங்களது கார்ப்பரேட் இணையதளத்தில் http://licindia.in தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மொழி மாற்றம் சரியாக நடைபெறவில்லை. இந்த சிக்கல் தற்போது சரி செய்யப்பட்டு தற்போது இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ளது. அசவுகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}