சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 21ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன முதல் மிதமான மழை வரை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது .
இந்த சூழ்நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மார்ச்16 மற்றும் 17ஆகிய தேதிகளில் தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச் 18 மற்றும் 19 தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மார்ச் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
வெயில் நிலவரம்:
மார்ச் 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். மார்ச் 18 மற்றும் 19 தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைய கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
மாமன் கூட நடந்து பாரு மகிழ்வுடனே தொடர்ந்து பாரு!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
மகளே நிறைவேற்றுவாயா?
அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு இனி நேரக் கட்டுப்பாடு கட்டாயம் - அமைச்சர் அருண்ராஜ்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
{{comments.comment}}