தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழை  பெய்ய வாய்ப்பு

Aug 19, 2023,01:14 PM IST
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக இரவு நேர மழை பெய்து மண்ணையும், மக்களையும் குளிர வைத்தது.

இந்த நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல் தெரிவித்துள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வருகிற 25ம் தேதி வரை இந்த மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் மேக மூட்டமாக காணப்படும் என்றும் சில நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸாக இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!

news

ஜீவனின் ஜீவிதம்!

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்

news

மங்கலா.. சமூகத்தில் ஒரு ஒளி.. (மீண்டும் மங்கலம்.. மினி தொடர்கதை - 6)

news

ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்