Palli vilum palan: ஈசான மூலையில லேசான பல்லிச் சத்தம் .. கேட்டால்.. என்ன பலன் தெரியுமா?

Nov 14, 2024,05:16 PM IST

எதிர்காலத்தில் நடக்க போகும் சில விஷயங்களை முன்கூட்டியே அறிவுறுத்தும் சில கருவிகளாகவே பறவைகள், பூச்சிகள் நம்முடைய சாஸ்திரங்களில் கருதப்படுகிறது. அவற்றில் பல்லிகளுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. பஞ்சாங்கத்தில் பல்லிகள் கத்துவது, பல்லி விழுவது போன்றவற்றை வைத்தே பலன்கள் கணிக்கப்பட்டது. இதற்கு கெளரி சாஸ்திரம் என்றே பெயர். நவகிரகங்களில் பல்லி என்பது கேது பகவானை குறிப்பதாகும்.


காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகியவற்றில் உள்ள பெருமாள் கோவில்களில் பல்லியை வழிபடுவும் பழக்கமும் மக்களிடம் உள்ளது. கோவில்களில் பூஜையின் போதும், ஜோதிடம் கணித்து சொல்லும் போதும் பல்லிகள் கத்தினால் அதை நல்ல சகுனமாகவும், கடவுள் ஆசி வழங்கி விட்டதாகவும் சொல்வார்கள்.


பல்லிகள் வீடுகளில் சாதாரணமாக திரியும் என்றாலும் அவைகள் அனைத்து நேரங்களிலும் சத்தமிடுவது கிடையாது. பல்லிகள் சத்தமிடும் நேரம், திசை ஆகியவற்றை வைத்தும் பலன்கள் சொல்லும் முறை நம்முடை சாஸ்திரத்தில் உள்ளது. பல்லி வீட்டின் எந்த திசையில் கத்தினால் என்ன பலன் என்பதை வாங்க தெரிஞ்சுக்கலாம்.




பல்லிகள் கத்தும் திசையும், பலன்களும் :


கிழக்கு - வீட்டின் கிழக்கு பகுதியில் பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டில் ராகு கிரகத்தின் தன்மை உள்ளதாக அர்த்தம். இத வீட்டிற்கு நல்லதல்ல. கெட்ட செய்திகள் வரக்கூடும்.


தென்கிழக்கு - தென்கிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் வீட்டில் ஏதாவது பிரச்சனை வரப் போகிறது என்று அர்த்தம்.  சில நாட்களில் வீட்டில் ஏதாவது கெட்டது நடக்க போகிறது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.


வடக்கு - வடக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் வீட்டில் சுப காரியம் நடக்க போகிறது அல்லது சுப செய்தி தேடி வரப் போகிறது என்று அர்த்தம். 


தெற்கு - திற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் பெரிய மனிதர்களின் சந்திப்புகள், உயர்வுகள் வரப் போகிறது என்று அர்த்தம்.


தென்மேற்கு - தென்மேற்கு திசையில் பல்லி சத்தமிட்டால் வீட்டிற்கு விருந்தினர்கள் வரப் போகிறார்கள் என்றும், லாபம் வரப் போகிறது என்றும் அர்த்தம்.


மேற்கு - மேற்கு திசையில் பல்லி கத்தினால் கடன், நோய்கள் வரப் போகிறது, வீட்டில் சண்டை வரப் போகிறது என்று அர்த்தம்.


வடகிழக்கு - வடகிழக்கு திசையில் அதாவது ஈசான மூலையில் பல்லி கத்தினால் பகை வரும் என்று அர்த்தம். சில சமயங்களில் இது லாபத்தையும் கொடுக்கும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்

news

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

news

ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

news

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1996 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!

news

தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்

news

மணக்கமணக்க சாப்பிடலாம்.. மதுரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா 2025.. சுவைக்க வாங்க!

news

இலவச விமானப் பயணம்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரும் அசத்தலான சலுகை!

news

சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!

news

தங்கம் விலை நேற்று மட்டும் இல்லீங்க இன்றும் உயர்வு தான்... அதுவும் சவரனுக்கு ரூ.440 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்