இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலையத் தேவையில்லை.. இ சேவை மையம் மூலம் எல்எல்ஆர் பெறலாம்!

Mar 13, 2024,05:50 PM IST

சென்னை: இன்று முதல் எல்எல்ஆர் எனப்படும் வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுனர் உரிமத்தை இ-சேவை மையங்கள் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசின் போக்குவரத்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.


வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுனர் உரிமத்தை தான் எல்எல்ஆர் என்று  கூறுகிறோம். அதாவது இந்த லைசென்ஸ் வாங்கிக் கொண்டால், எல் போர்டு போட்டுக் கொண்டு வண்டியை ஓட்டலாம். முன்னர் எல்லாம் எல்எல்ஆர் பெற வேண்டும் என்றால் வாகன ஓட்டுனர்கள் ஒரு நாள் முழுவதும் ஆர்டிஒ அலுவலகத்தில் நேரில் போய் நின்று தான் எடுக்கும் நிலை இருந்தது. இதனால் நேர விரையம் ஆனது. லீவு போட வேண்டி வந்தது. அத்துடன் கூட்டமும் அதிகமாகவே இருக்கும். இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினார்கள். 




மேலும் எல்எல்ஆர் பெற வேண்டும் என்றால், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள், இடைத்தரகர்கள், தனியார் பிரவுசிங் சென்டர்களை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டது.  இதனால் மக்களின் நேரம், பணமும் விரையம் ஆனது. இடைத்தரகர்களும் அதிகப்படியான பணத்தை பெற்றுக் கொண்டு எல்எல்ஆர்ரை வாங்கி கொடுத்து வந்தனர். இது போன்ற பல்வேறு காரணங்களினால் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினார்கள்.


இனி அந்த கஷ்டமெல்லாம் கிடையாது. இந்த குழப்பங்களிலிருந்து பொதுமக்கள் தப்பிக்கும் நிலை தற்போது வந்து விட்டது. அது என்னான்னு கேட்குறீங்களா? வாங்க பார்க்கலாம்.


இன்று முதல்  இ-சேவை மையங்கள் மூலமாக வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுனர் உரிமம் எனப்படும் எல்எல்ஆர் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நேரமும், பணமும் இதனால் மிச்சப்படும் விதமாக  அரசு போக்குவரத்து துறை சார்பில் எல்எல்ஆர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள  இ சேவை மையங்கள் மூலம் எல்எல்ஆர் பெற விண்ணப்பிக்கும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.


சேவை கட்டணம் ஆக ரூபாய் 60 செலுத்தினால் போதும். ஒப்புதல் அளிக்கப்பட்ட எல்எல்ஆர் படிவத்தை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இதே போல மோட்டர் வாகனத்துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளுக்கான ஓட்டுனர் உரிமம், பெர்மிட் உரிமம், மாற்றம் உள்ளிட்டவைகளை இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!

news

கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!

news

என்னுள் எழுந்த (தீ)!

news

144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!

news

ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்