லோக்சபா தேர்தல் 2024 : வேட்பு மனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்

Mar 30, 2024,10:07 AM IST
சென்னை : லோக்சபா தேர்தலின் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு இன்று (மார்ச் 30) கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் இன்று யாரெல்லாம் வேட்புமனுக்களை வாபஸ் பெற போகிறார்கள் என்பதை அனைத்து கட்சிகளும் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருக்கின்றன.

2024ம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக மார்ச் 20ம் தேதி தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. 

முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 21 ம் தேதி துவங்கி நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 28ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 1403 வேட்பாளர்கள், 1749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக கரூரில் 73, வட சென்னையில் 67, தென் சென்னையில் 64 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 



இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இவற்றில் 1085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 664 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு மார்ச் 30ம் தேதியான கடைசி நாளாகும். இதனால் எந்தெந்த தொகுதியில் யார் யாரெல்லாம் வேட்புமனுக்களை வாபஸ் பெற போகிறார்கள் என்பதை அனைத்து கட்சிகளும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைகிறது. இதனால் மாலை 5 மணிக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிடும். ஏற்கனவே சில வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களுக்கும் தேர்தல் சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறும். அதற்கு பிறகு வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்