Loksabha Election results: தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்தது.. ஈவிஎம் வாக்குகள் எண்ணப்படுகின்றன!

Jun 04, 2024,09:05 AM IST

டெல்லி: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குககளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அது முடிந்து தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.


மக்களவைத் தேர்தலில்  பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாடு முழுவதும் 8 மணிக்குத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், 39 மையங்களில் எண்ணப்படவுள்ளன. சென்னையில் லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரிக் கல்லூரி ஆகிய மையங்களில் வாக்குககள் எண்ணப்படுகின்றன.


வாக்கு எண்ணிக்கையின்போது, முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்  பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணப்பட்டு உரிய ஒப்புதல் பெற்ற பிறகு அதன் முடிவு வெளியிடப்படும். 


ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்க 272 எம்.பிக்கள் தேவை. அந்த எண்ணிக்கையைப் பெறும் கட்சியோ அல்லது கூட்டணியோதான் ஆட்சியமைக்க முடியும். இந்த மாஜிக் எண்ணைப் பெறப் போவது யார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் உள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரிக்கும் ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்ட தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் கட்சி போட்டியில் உள்ளன.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணி, 3வது அணியாக பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டுள்ளன.


அம்பாசமுத்திரத்தில் ஸ்டிராங் ரூம் கதவின் பூட்டை உடைத்து உள்ளே போன அதிகாரிகள்


2024 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தொகுதியாக உள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது 10 லட்சத்து 60 ஆயிரத்து 461 பேர் தங்கள் வாக்கினை செலுத்தினர். வாக்குப்பதிவு முடிந்த பிறகு இவிஎம் மிஷின்கள் வாக்கு எண்ணிக்கை மையமான நெல்லை அரசு பொறியியல் மருத்துவக் கல்லூரி பாதுகாப்பாக வைக்கப்பட்டன.


இந்த  அறையின் முன்பு கடந்த ஒன்றரை மாதமாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில்,  சட்டமன்றத் தொகுதி வாக்குப்பெட்டி உள்ள பகுதிக்கு முகவர்கள் செல்லும் வழியில் உள்ள வாசலின் பூட்டிற்கான சாவி தொலைந்தது. இந்நிலையில், அதிகாரிகள் முன்னிலையில் பூட்டு உடைக்கப்பட்டது.இதனால் அங்கு பரபரப்பு நிலவு வரும் சூழலில் அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

 

முன்னேற்பாடுகளை பொறுத்தவரை மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்கு எண்ணும் பணிக்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதி வாரியாக தலா 51 பணியாளர்கள் வீதம் மொத்தம் 306 பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில்  ஈடுபடுத்த பட உள்ளனர். மொத்தம் 22 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட உள்ளது. மேலும், பிற்பகல் 1 மணிக்கு பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

news

சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்

news

முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா

news

மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை

news

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து

news

Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!

news

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

news

வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!

news

தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது

அதிகம் பார்க்கும் செய்திகள்