நடிகர் ஆமீர் கான், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கவுள்ளார், இது ஜூன் 20ஆம் தேதி வெளியாகவுள்ள "Sitaare Zameen Par" திரைப்படத்தின் புரமோஷனின்போது உறுதி செய்யப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கவுள்ளது. மேலும், ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து "Dadasaheb Phalke" திரைப்படத்திலும், மகாபாரதம் திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் ஆமிர்கான்.
ஆமீர் கான் தற்போது "Sitaare Zameen Par" திரைப்படத்தின் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறார். அவர் சமீபத்திய ஊடக சந்திப்பின்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக உறுதிப்படுத்தினார்.
ஆமிர்கான் கூறுகையில், லோகேஷும் நானும் ஒரு படத்தில் வேலை செய்கிறோம், அது ஒரு சூப்பர் ஹீரோ படம். இது ஒரு பெரிய அளவிலான அதிரடி படம், இது அடுத்த ஆண்டு, இரண்டாம் பாதியில் தொடங்கும். இதற்கு மேல் நான் அதிகமாக சொல்ல முடியாது என்றார்.
விக்ரம், லியோ, கைதி மற்றும் மாஸ்டர் போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் ஆமீர் கானின் முதல் கூட்டணியாகும்.
அதேசமயம் PK 2 வதந்திகளை ஆமீர்கான் மறுத்துவிட்டார். "எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. தாதாசாகேப் பால்கே படம் நிச்சயமாக தயாரிக்கப்படுகிறது. ராஜுவும் நானும் அதில் வேலை செய்கிறோம்." என கூறி உள்ளார்.
ஆமீர் கான் தனது நீண்டகால கனவு திட்டமான மகாபாரதத்தையும் பற்றி குறிப்பிட்டார். கடந்த 25 வருடங்களாக தான் அதைப்பற்றி கனவு கண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கும் "Sitaare Zameen Par", ஆமீர் கானின் 2007 ஆம் ஆண்டு திரைப்படமான "Taare Zameen Par" படத்தின் தொடர்ச்சியாகும். ஆமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள "Sitaare Zameen Par" திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
சசிகலா வெளியிட்ட அறிக்கை.. ஆடிப்போன அதிமுக.. எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கு ஆபத்தா?
பிக்பாஸ் தமிழ் 9.. அடுத்த சீசனைக் கண்டுகளிக்க ரெடியா மக்களே.. இன்று முக்கிய அறிவிப்பு
விஜய்யுடன் கூட்டணி குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஓபன் பதில்!
தமிழகத்தில் இன்று முதல் செப்., 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 620 பேர் பலி!
Hello September .. செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. எவ்வளவு ஸ்பெஷல் இருக்கு தெரியுமா!
ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்விற்கும் தகுதி தேர்வு கட்டாயம்: உச்சநீதிமன்றம்!
காஞ்சனா 4.. பேய்ப் படத்தில் ராஷ்மிகா.. ராகவா லாரன்ஸின் அடுத்த அதகளம் ரெடி.. வேற லெவல் பிளான்!
ரஜினியைத் தொடர்ந்து இவருடன் இணைய ஆசைப்படுகிறேன்.. நெல்சன் வெளியிட்ட ஆசை!
{{comments.comment}}