சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக- தேமுதிக இடையேயான 3ம் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு தேதி சொல்லி விட்டார்கள். திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட எல்லாம் முடிந்து விட்டது. பாஜக மற்றும் அதிமுக கூட்டணியின் இறுதி வடிவம்தான் இன்னும் தெரியாமல் உள்ளது.
அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தீவிரமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறது. புதிய தமிழகம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகியவை கூட்டணியில் இணைந்துள்ளன. இந்த நிலையில், தேமுதிகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்த இன்று 3வது சுற்றுப் பேச்சுவார்தை மாலை 6 மணிக்கு தொடங்கியது.

இரு கட்சிகளுக்கு இடையே மார்ச் 1ஆம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கிருஷ்ணகிரி, விருதுநகர், திருச்சி, கடலூர் ஆகிய தொகுதிகளை ஒதுக்க தேமுதிக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த முறை ஒதுக்கிய வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக-தேமுதிக இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 6ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தேமுதிக துணை செயலாளர் எல்.கே சுதீஷ், அவைத்தலைவர் பி இ இளங்கோவன், அழகாபுரம் ஆர் மோகன்ராஜ், பா. பார்த்தசாரதி உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு கலந்து கொண்டது. இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்பட வில்லை.
இந்நிலையில், இன்று மாலை 3ம் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. இன்றாவது உடன்பாடு ஏற்படுமா என்ற அயர்ச்சியில் இரு கட்சியினரும் உள்ளனர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}