எவ்வளவு சீட் வேணும்.. "21 வேணும்.. இந்தாங்க லிஸ்ட்".. பாஜகவை அதிர வைத்த அமமுக!

Feb 05, 2024,10:21 PM IST

சென்னை:  லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனப்படும் அமமுக முடிவு செய்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளன. 21 தொகுதிகளைக் கேட்டு பாஜகவை அதிர வைத்துள்ளது அமமுக.


இத்தனை தொகுதிகளையும் பாஜக தருமா என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இதில் பாதியாவது கிடைக்கும் என்று அமமுக நம்புகிறது.


அமமுக படு லாவகமாக தனது தொகுதிகளை திட்டமிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய தொகுதிகளாக தேர்வு செய்து பாஜகவை அதிர வைத்துள்ளது. அமமுக கேட்டுள்ள 21 தொகுதிகளில், 3 தனித் தொகுதிகளும் அடக்கம். அதில் ஒன்று தென்காசி. இந்தத் தொகுதியை புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் கேட்டு வருகிறார். அதை யாருக்கு பாஜக கொடுக்கும் என்று தெரியவில்லை.


அதிகபட்சமாக தென் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளைக் கேட்டுள்ளது அமமுக. அதேபோல மத்திய தமிழ்நாட்டில் 5 தொகுதிகளையும் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 தொகுதிகளையும் கேட்டுள்ளது. மேற்கு மாவட்டங்களில் 2 தொகுதிகளை மட்டுமே அது கோரியுள்ளது.




தமிழ்நாட்டில் தெளிவாக உள்ள ஒரே கூட்டணியாக திமுக விளங்குகிறது. அங்கு ஏற்கனவே உள்ள கட்சிகள்தான் இந்த தேர்தலையும் சந்திக்கப் போகின்றன. கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளிலேயே இந்த முறையும் அனேகமாக போட்டியிட வாய்ப்புள்ளது. சில தொகுதிகளில் மாற்றம் இருக்கலாம். மற்றபடி பெரிதாக எந்தப் பிரச்சினையும் இந்த முறை ஏற்பட வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். அதிகபட்சம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணையலாம் என்று தெரிகிறது.


வேறு பெரிய கட்சிகள் எதுவும் வர வாய்ப்பில்லை. காரணம், அவர்களுக்கேற்ற தொகுதிகளைத் தர கூட்டணியில் இடமில்லை. மறுபக்கம் அதிமுக கூட்டணியில் யார் இருக்கப் போகிறார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை. கடைசி நிமிடத்தில் கூட மாற்றம் வரும் என்று ஜெயக்குமார் சொல்லிக் கொண்டிருக்கிறார். அது என்ன மாற்றம் என்று தெரியவில்லை.


பாஜக கூட்டணியில் யார் யார்?


இந்த நிலையில் பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, அமமுக, புதிய நீதிக் கட்சி,  புதிய தமிழகம், இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை இடம் பெறும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இதில் அமமுக மற்றும் ஓபிஎஸ்ஸிடமிருந்து போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விருப்பப் பட்டியலை பாஜக மேலிடம் கேட்டுள்ளதாம். இதில் அமமுக தனது விருப்பப் பட்டியலை அனுப்பி வைத்து விட்டதாம்.


தங்களுக்கு 21 தொகுதிகள் தேவை என்று கூறி பாஜகவை அதிர வைத்துள்ளதாம் அமமுக. இதில் எத்தனை தொகுதிகளை பாஜக தரும் என்று தெரியவில்லை. ஆனால் குறைந்தது 12 சீட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அமமுக உள்ளது. 15 சீட் வரை அழுத்திக் கேட்டுப் பெறவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது. 


பிப்ரவரி 11ம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா சென்னை வருகிறார். அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. குக்கர் சின்னத்தில் போட்டியிட டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளார். அதில் போட்டியிட்டு கணிசமான வெற்றியைப் பெற்றால், அடுத்து அதிமுகவை உடைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 


அமமுக கோரியுள்ள தொகுதிகள் என்று கூறப்படுபவை:


வட தமிழ்நாடு


அரக்கோணம்

ஆரணி

வட சென்னை

தென்சென்னை

திருவண்ணாமலை 


தென் தமிழ்நாடு


தென்காசி (தனி)

மதுரை

ராமநாதபுரம்

தூத்துக்குடி

திண்டுக்கல் 

விருதுநகர்

திருநெல்வேலி

தேனி

சிவகங்கை


மத்திய தமிழ்நாடு (காவிரி டெல்டா)


நாகப்பட்டனம் (தனி)

சிதம்பரம் (தனி)

திருச்சிராப்பள்ளி

தஞ்சாவூர்

மயிலாடுதுறை


மேற்கு தமிழ்நாடு


பொள்ளாச்சி

திருப்பூர்

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்