"புதுச்சேரியில் நாங்களே போட்டியிடுகிறோம்".. பாஜக கோரிக்கை.. முதல்வர் ரங்கசாமி சொன்ன பதில்?

Feb 03, 2024,06:03 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸே இந்த முறையும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த சீட்டை பாஜகவிடம் தூக்கிக் கொடுத்து விட்டார் என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான என். ரங்கசாமி என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.


புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு லோக்சபா தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியானது பாரம்பரியமாகவே காங்கிரஸ் கட்சியின் வசம்தான் இருந்து வந்துள்ளது.  1967ல் நடந்த முதல் தேர்தல் முதல் 1996ம் ஆண்டு வரை காங்கிரஸே இங்கு வென்றுள்ளது. இடையில் 1977ம் ஆண்டு மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.




அதன் பின்னர் 1998ம் ஆண்டு திமுக வசம் தொகுதி போனது. பின்னர் 1999ல் மீண்டும் காங்கிரஸிடம் போன புதுச்சேரி, 2004ல் பாமகவிடமும் போனது. 2014ல் என்.ஆர். காங்கிரஸ் இங்கு வென்றது.  ஆனால் கடந்த 2019 தேர்தலில் என். ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நாராயணசாமி என்பவரை, காங்கிரஸ் பழம்பெரும் தலைவரும்,  முன்னாள் முதல்வருமான வைத்திலிங்கம் தோற்கடித்தார். இங்கு பாஜக இதுவரை வென்றதில்லை. ஆனால் இந்த முறை போட்டியிட விரும்புகிறது.


ஆனால், இந்த முறை மீண்டும் என்.ஆர். காங்கிரஸே போட்டியிடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையிலான குழுவினர் முதல்வர் ரங்கசாமியை  சந்தித்து போட்டியிடுவது குறித்துப் பேசினர். தாங்கள் போட்டியிட விரும்புவதாகவும், தொகுதியை விட்டுத் தரும்படியும் அவர்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.


இதற்கு உடனடியாக பதிலளிக்காத ரங்கசாமி, சற்று யோசித்து விட்டு, பிறகு சரி போட்டியிடுங்க என்று கூறி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.. ஆனால் தொகுதிக்கு நன்கு அறிமுகமான வேட்பாளரைப் போட்டால்தான் ஜெயிக்க முடியும், பார்த்துக்கங்க என்றும் அறிவுரை கூறினாராம். 


பாஜகவினர் தற்போது வேட்பாளர் பட்டியல் ஒன்றை தயாரித்து மேலிடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனராம்.  அதிலிருந்து ஒருவரை கட்சித் தலைமை தேர்வுசெய்யும் என்று தெரிகிறது. அனேகமாக அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. இவர் முதல்வர் ரங்கசாமிக்கு உறவினர் ஆவார். மேலும் புதுச்சேரி மக்களுக்கு நன்கு அறிமுகமானவரும் கூட. ரங்கசாமியிடமிருந்து விலகி, பாஜகவில் இணைந்து, ரங்கசாமி அமைச்சரவையில் அமைச்சராக இருந்து வருகிறார் நமச்சிவாயம் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேசமயம், புதுச்சேரியில் போட்டியிட புதுச்சேரி அல்லாத சில பாஜக முக்கியத் தலைவர்கள் சிலர் முட்டி மோதி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதில் 2 பேர் மிக மிக முக்கியமான விஐபி தலைவர்களாம். யாருக்கு பாஜக சீட் தரப் போகிறது என்பது சஸ்பென்சாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்