Loksabha Elections 2024: வேட்பாளர் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.. திமுக செம ஃபாஸ்ட்!

Feb 15, 2024,08:37 PM IST

சென்னை: 2024ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வரும் 19 ஆம் தேதி முதல் விண்ணுப்பங்களை அளிக்கலாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.


2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இப்போதே பல்வேறு கட்சிகளும் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச ஆரம்பித்து விட்டனர். முக்கியக் கட்சிகள் அடுத்தடுத்த வேலைகளில் பிசியாக ஈடுபட்டுள்ளன.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசி வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை விரைவில் முடியவுள்ளது. மறுபக்கம் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் சூடாக நடந்து வருகிறது.  இந்த நிலையில், தற்போது வேட்பாளர் விருப்ப மனுக்களை வரவேற்றுள்ளது திமுக.


திமுக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினர்  விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று திமுக பொதுசெயலாளர் துறை முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:




நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொது தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள் வருகிற 19.2.200 4 முதல் தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.


போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து 1.3. 2024 முதல் 7. 3.2024 மாலை 6 மணிக்குள் தலைமை கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் -ரூ 50,000. விண்ணப்ப படிவத்தை தலைமை கழகத்தில் ரூபாய் 2000 விதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்