கோவை: பிரதமர் மோடி கோவையில் இன்று நடைபெறும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். நாளை சேலத்தில் நடைபெறும் பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார்.
தமிழ்நாட்டில் லேக்சபா தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.
இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. பாஜக சார்பில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார். அங்கு வாகனப் பேரணியில் பங்கேற்கவுள்ளார். இதற்காக ஆள் திரட்டும் பணியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலமாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகே வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக 5:45 மணிக்கு வாகன பேரணி தொடங்குகிறது. பூ மார்க்கெட், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி, ஆர் எஸ் புரம் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் பிரதமரின் ரோடு ஷோ நிறைவடைகிறது.
வாகன பேரணி சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கோவையில் உள்ள விருந்தினர் மாளிகையில் இன்று இரவு தங்குகிறார் பிரதமர்.
பிரதமரின் வருகை காரணமாக கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பாதுகாப்பு படை, தேசிய பாதுகாப்பு படை, மத்திய உளவு பிரிவு மற்றும் தமிழக காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சுமார் 4,000 மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் பணியாற்ற உள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் கூறுகையில், பிரதமர் வருகையை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம் தொடங்கி ஆர் எஸ் புரம் அஞ்சல் நிலையம் வரையிலான பகுதிகளில் நான்காயிரத்துக்கு மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.
நாளை சேலத்தில் கூட்டம்
நாளை சேலம் வரும் பிரதமர் ஜெகன் நாயக்கன்பட்டியில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார். இதனையொட்டி சேலத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக கமலாபுரம் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார் பிரதமர் மோடி.
CSK-விலிருந்து அஸ்வின் வெளியேறப் போகிறாரா.. சஞ்சு சாம்சன் உள்ளே நுழையப் போகிறாரா?
தேமுதிகவில் என்ன நடக்கிறது?.. பிரேமலதாவுடன் கே.சி. வீரமணி சந்தித்தது எதற்காக??
தானே முதல்வர் வேட்பாளர்.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. விஜய் புரட்சி படைப்பார்.. இந்தியா டுடே தகவல்!
ராமதாஸ், அன்புமணி நேரில் வாங்க.. தனியாக பேச வேண்டும்.. நீதிபதி உத்தரவு.. அடுத்தது என்ன?
தவெக மாநாட்டிற்கு கூட்டம் சேர்ந்தால் என்ன நடக்கும்.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்?
BREAKING: 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.. இந்த ஆண்டே அமல்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
டெல்லியில் ஷாக்கிங்.. பார்க்கிங்கில் தகராறு.. நடிகை ஹூமா குரேஷியின் உறவினருக்கு நேர்ந்த விபரீதம்
டிரம்ப் வரி எதிரொலி.. இந்திய ஆடைகளை வாங்கவதை நிறுத்தி வைக்கும் அமேசான், வால்மார்ட்
ஆகஸ்ட் 12ல் தாயுமானவர் திட்டம் துவக்கம்...யாருக்கு இந்த திட்டம்?
{{comments.comment}}