டெல்லி: இந்தியா டுடே தி மூட் ஆப் த நேஷன் கருத்துக் கணிப்பில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 20 தொகுதிகளையும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே நடத்திய தி மூட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகிக் கொண்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மொத்த மாநிலத்தையும் கைப்பற்றும் என்று கூறியுள்ளனர். அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணிகளுக்கு எதுவும் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிற மாநிலங்களுக்கான கணிப்புகளையும் வெளியிட்டுள்ளனர். அதன்படி கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளையும் இடதுசாரி கூட்டணி அள்ளிக் கொண்டு போகப் போகிறதாம். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்த முறையும் அங்கு எதுவும் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு உயிர் கிடைத்திருக்கிறது. அங்கு மொத்தம் 25 இடங்கள் உள்ளன. அதில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 17 இடங்களில் வெற்றி கிடைக்கலாமாம். அதேசமயம், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களே கிடைக்குமாம். தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்தியா கூட்டணிக்கு ஒன்றும் கிடைக்க வாய்ப்பில்லையாம்

பிற மாநிலங்கள் விவரம் வருமாறு:
ஹிமாச்சல் பிரதேசம் (மொத்தம் 4)
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 4
வாக்கு சதவீதம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 60%
இந்தியா கூட்டணி - 29 %
மற்றவர்கள் - 11 %
கர்நாடகா (மொத்த இடங்கள் 28)
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 24
இந்தியா கூட்டணி - 4
வாக்கு சதவீதம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 53 %
இந்தியா - 42%
மற்றவர்கள் - 5%
கேரளா (மொத்த இடங்கள் 20)
இந்தியா கூட்டணி - 20
வாக்கு சதவீதம்
இந்தியா கூட்டணி - 47%
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 15 %
மற்றவர்கள் - 38%
ஆந்திரப் பிரதேசம் (மொத்த இடங்கள் 25)
தெலுங்கு தேசம் - 17
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 8
வாக்கு சதவீதம்
தெலுங்கு தேசம் - 45%
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 41 %
மற்றவர்கள் - 9%
இந்தியா - 3%
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 2%
தெலங்கானா (மொத்த இடங்கள் 17)
காங்கிரஸ் - 10
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 3
பிஆர்எஸ் - 3
ஓவைசி கட்சி - 1
ஜம்மு காஷ்மீர் (மொத்த இடங்கள் 5)
இந்தியா கூட்டணி - 3
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 2
ஹரியானா (மொத்த இடங்கள் (10)
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 8
இந்தியா - 2
பஞ்சாப் (மொத்த இடங்கள் 13)
ஆம் ஆத்மி - 5
காங்கிரஸ் - 5
பாஜக - 2
சிரோமணி அகாலிதளம் - 1
உத்தரகண்ட் (மொத்த இடங்கள் 5)
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 5
அஸ்ஸாம் (மொத்த இடங்கள் - 14)
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 12
இந்தியா - 2
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}