சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தாமதமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்திற்கு பிறகு தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே பரவலாக ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நீடித்து வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவது மேலும் தாமதமாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில் தமிழக- இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என கணித்துள்ளது.
தற்போது அதே இடத்தில் மையம் கொண்டுள்ள, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று கன மழை:
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கன மழை:
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் கன மழை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 14ஆம் தேதி:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 15ஆம் தேதி:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல்,மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். தொடர்ந்து இதற்கடுத்த இரு தினங்களில் சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
{{comments.comment}}