-ஸ்வர்ணலட்சுமி
சென்னை: உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியமான ஒரு ரெசிப்பியைத்தான் இப்போ பார்க்கப் போறோம். அதுதான் வாழைப்பூ அரைத்து விட்டக் குழம்பு. லஞ்ச்சுக்கு அருமையான குழம்பு இது. அதை விட முக்கியமாக உடம்புக்கு ஆரோக்கியமானதும் கூட.
சரி எப்படி செய்யலாம்னு பார்ப்போமா...!
தேவையான பொருட்கள்

வாழைப்பூ - நடுவில் உள்ள வெள்ளை நரம்பு வெள்ளை தோல் நீக்கி கட் செய்க (இதனை நீர் மோரில் வெள்ளையாக இருக்க ஒரு ஸ்பூன் நீர் மோரில் போடவும்)
சின்ன வெங்காயம் - 6 உரித்தது (கட் செய்க)
பூண்டு - ஆறு பல்
வர மல்லி, பெருங்காயம் - அரை ஸ்பூன்
கருவேப்பிலை, மல்லித்தழை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
வர மிளகாய் - 3
தேங்காய் துருவல் -2 ஸ்பூன்
தக்காளி - 1 கட் செய்க
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
புளி - சிறிதளவு
உப்பு புளி காரம் தேவைக்கு ஏற்ப
செய்முறை
1. கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு வர மல்லி வர மிளகாய் சீரகம், தேங்காய் பெருங்காயம், பூண்டு, கருவேப்பிலை தக்காளி, புளி ஒன்றன்பின் ஒன்றாக வறுக்கவும்
2. ஆறிய பின் மிக்சியில் அரைக்கவும்
3. குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
4. சின்ன வெங்காயம் வாழைப்பூ, மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்
5. பிறகு அரைத்த விழுது மல்லி தூள் உப்பு சேர்க்கவும் தண்ணீர் ஊற்றவும் (கால் கப்)
6. ஒரு விசில் விட்டு இறக்கவும்
7. பிரஷர் அடங்கியதும் குழம்பு சிறிது கெட்டிப்படும் வரை கொதிக்க விடவும்
8. சர்விங் பவுலுக்கு குழம்பை மாற்றவும் கமகம வாழைப்பூ குழம்பு ரெடி
இட்லி தோசை சாதம் ஆகியவற்று ஏற்ற சைட் டிஷ்
பயன்கள்
1. பொட்டாசியம் சத்து நிறைந்தது 2. வாரம் ஒருமுறை வாழைப்பு சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு உற்சாகம் மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கும்
3. மலச்சிக்கல் பிரச்சினை தீரும்
4. அல்சர் குணமாகும்
5. ரத்த அழுத்தம் சீராகும்
6. இதயம் வலுப்படும்
7. விட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண் பார்வை திறன் நன்றாக இருக்கும்
8. மூலம் காரணமாக ஏற்பட்ட புண்களை ஆற்றும்
9. ரத்த சோகை பிரச்சினை தீரும், சர்க்கரை வியாதி சரியாகும்
10. கர்ப்பிணி பெண்களுக்கும் கணையம் வலுப்பெறும் தாய்ப்பால் அதிகரிக்கச் செய்யும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
{{comments.comment}}