சென்னை: நடிகை திரிஷா உள்ளிட்ட மூவரிடம் தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர அனுமதி கோரி நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதனால் மன்சூர் அலிகானுக்கு அபராதம் கட்டுவதிலிருந்து நிம்மதி கிடைத்துள்ளது. நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அந்த அபராதத் தொகையை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
தனது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மன்சூர் அலிகான் தரப்பில், திரிஷா, குஷ்பு ஆகியோர் தமிழகத்தில் இருக்கும் நிலையில், சிரஞ்சீவி மட்டும் ஆந்திராவில் இருப்பதால் தான் அவருக்கு எதிராக வழக்குத்தொடர அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்ததாகவும், ஆனால் வழக்கு அபராதத்துடன், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், மற்ற இருவர் மீதான வழக்கையும் தொடர விரும்பவில்லை எனவும் மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டனர். அதேசமயம், வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்.
உத்தராகண்ட் வரலாறு காணாத காட்டாற்று வெள்ளத்தால் மலைச்சரிவு... 17 பேர் உயிரிழப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக., 14ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
7 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
எங்கள் வேலை வாய்ப்புகளை இந்தியர்கள் பறிக்கிறார்கள்.. அமெரிக்க குடியரசுக் கட்சி பிரமுகர் புலம்பல்
சேலத்து மகாராணி.. கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா.. களை கட்டிக் காணப்படும் சேலம்!
தமிழ்நாடு தந்த அன்பை.. சிறப்பாக திருப்பிக் கொடுத்துள்ளீர்கள்.. சூர்யாவுக்கு கமல்ஹாசன் பாராட்டு
மிக்சர் சாப்பிடலையாம்.. விஜய்யின் அமைதிக்கு இது தான் காரணமா?.. இது லிஸ்ட்லையே இல்லையே!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 05, 2025... இன்று உதவிகள் தேடி வரப்போகும் ராசிகள்
தவெக 2வது மாநில மாநாடு.. இன்று புதிய தேதியை அறிவிக்கிறார் விஜய்.. அனுமதி கிடைக்குமா?
{{comments.comment}}