சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றலாம், இறக்கலாம். போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களிலிருந்தும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம். அதேசமயம், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பஸ்கள் கண்டிப்பாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குப் போக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 24ஆம் தேதி முதல், புதிதாக துவங்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் புறப்படும், வந்து சேரும் என போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதேபோல ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்தே புறப்பட வேண்டும், கிளாம்பாக்கத்திலேயே நிறுத்தப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரதவிட்டது. அதன்படி அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசின் உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி மஞ்சுளா விசாரித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மீஞ்சூரில் தயாராகி வரும் ஆம்னி பஸ் முனையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரை தற்காலிகமாக சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.
- கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ் நிறுவனங்களின் பணிமனைகளிலிருந்து பஸ்களை இயக்கலாம்.
- போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம். இதைத் தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. இதுதொடர்பான உத்தரவுகளை அனைத்து பஸ் புக்கிங் செயலி நிறுவனங்களும் தெளிவாக அமல்படுத்த வேண்டும்.
- தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு பயணிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும், அதேபோல இறக்க வேண்டும். இதை கட்டாயம் அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}