உளுந்தூர்ப்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே கவனக்குறைவாகவும், அதி வேகமாகவும் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படக் காரணமாக இருந்ததாக மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர் மீது உளுந்தூர்ப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடந்தது. மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, கவர்னர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதீனம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நிகழ்ச்சியில் பேசும்போது, தன்னை கொலை செய்ய கார் விபத்து மூலம் சதி நடந்ததாக கூறினார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது, இன்னொரு கார் தன் கார் மீது உரசியது என்றும், இது திட்டமிட்ட சதி. என்னை கொல்ல விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரிகார்டை உடைத்துக்கொண்டு வந்தனர். விபத்துக்குப் பிறகு நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதில் நான் மயக்கமடைந்துவிட்டேன் என்றார்.
அத்தோடு நில்லாமல், தொப்பி அணிந்து தாடி வைத்த ஒருவர் நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்து மோதியதாக தனது டிரைவர் சொன்னதாகவும் ஆதீனம் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசில் புகார் தரவில்லை என்றும், சிவபெருமானிடம் புகார் தந்துவிட்டேன் என்றும் அவர் கூறினார். இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கே சலுகைகள் அதிகம். என் புகாரை எடுக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கள்ளக்குறிச்சி போலீஸால் விசாரணையில் இறங்கினர். விபத்து நடந்ததாக ஆதீனம் கூறிய இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, ஆதீனம் கூறியது போல எதுவுமே நடக்கவில்லை என்று தெரிந்தது. இதையடுத்து, மதுரை ஆதீனத்தை கொல்ல சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. ஆதீனம் பயணித்த கார் அதிவேகமாக சென்றதால் சிறு விபத்துதான் நடந்தது. ஆதீனம் காரை ஓட்டிய டிரைவரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் கூறினர்.
இதற்கிடையில், மதுரை ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியானது. அதில் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஆதீனத்தின் கார் வேகமாக சென்றது. அப்போது, எதிரே ஒரு வெள்ளை நிற கார் மெதுவாக வந்தது. ஆதீனத்தின் கார் அதி வேகமாக சென்று சாலையை கடந்ததைப் பார்த்து, அந்த சிறிய கார் டிரைவர் காரை சமயோஜிதமாக நிறுத்தி விட்டார். அவர் மட்டும் காரை நிறுத்தாமல் விட்டிருந்தால் மிகப் பெரிய விபத்து நடந்திருக்கும். இதுதான் அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சியாகும். ஆதீனத்தின் டிரைவர் ஏன் அந்த இடத்தில் அத்தனை வேகமாக கிராஸ் செய்தார் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் தற்போது, மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர் மீது உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டியதாக டிரைவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் புகார் அளித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?
இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
{{comments.comment}}