மதுரை: மதுரை தோப்பூர் பகுதியில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. இதற்கான இடம் தேர்வு நடைபெற்று வந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் எந்த பணிகளும் நடைபெறாமல் இருந்து வருகிறது.
இதனால் இதை வைத்தே ஒற்றைச் செங்கலைக் காட்டி திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார் உதயநிதி ஸ்டாலின். இப்போது லோக்சபா தேர்தலும் வரப் போகிறது. இந்த நிலையில் இன்னும் கூட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கவில்லை.

224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1264 கோடி மதிப்பில், சுமார் 750 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவ கல்லூரி, செவிலியர் கல்லூரி, பணியாளர்கள் குடியிருப்பு, மாணவ மாணவியர்களுக்கான விடுதி உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இந்த மருத்துவமனைக்காக தலைவர், செயல் இயக்குனர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. இந்த அனுமதி கிடைத்ததும் கட்டுமானப் பணிகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்
திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
{{comments.comment}}