வழக்கறிஞர் பி. வில்சன் குறித்த கருத்துக்கள் நீக்கம்: மதுரை ஹைகோர்ட் கிளை நீதிபதி ஆர் சுப்பிரமணியன்

Oct 15, 2024,04:09 PM IST

மதுரை: மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் குறித்த கருத்துக்களை நீக்குவதாகவும், அது தொடர்பான வீடியோ காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி ஆர். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


நீதிமன்ற விசாரணை வீடியோ காட்சியை பதிவு செய்து,பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.




மதுரை உயர்நீதிமன்ற கிளையில், அண்மையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்பான  வழக்கு விசாரணையில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம், மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கடுமையாக நடந்து கொண்டது, சக வழக்கறிஞர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது.


அகில இந்திய பார்கவுன்சில், கர்நாடக பார்கவுன்சில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு உட்பட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும்,  வழக்கறிஞர்களை கண்ணியக்குறைவாக நடத்துவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வரை கடிதம் அனுப்பியிருந்தனர். இது குறித்தான  நெறிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.


இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவி்ல் வழக்கிலிருந்து தனி நீதிபதியை விலகுமாறு கேட்கவில்லை என்றும், மூத்த வழக்கறிஞர் மீதான கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும், நீதிமன்ற விசாரணை காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.  


இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர். சுப்பிரமணியன் மற்றும் நீதிபதி விக்டோரியாகவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிசி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் ஆஜராகி, இந்த வழக்கிலிருந்து நீதிபதி விலக வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கேட்கவில்லை என்றும், நீதிமன்றத்தின் மேல் உரிய மரியாதை வைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார். மனுதாரர்கள் சொல்வதையே நீதிமன்றத்தில் கூற முடியும் என்றும் தெரிவித்தார்.


அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆர்.சுப்ரமணியன், நீதிமன்ற காட்சிகள் வெளியானது குறித்து சைபர் கமிட்டி  விசாரணை நடைபெற்று வருவதாகவும், சைபர்  க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரித்து வருவதாக தெரிவித்தார்.  யார் பதிவு செய்தார்கள் என்பதை ஓரிரு நாட்களில் கண்டுபிடித்து விடுவோம் என குறிப்பிட்டார். அந்த வீடியோ காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் குறித்த கருத்துகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை   வேறு நீதிபதி முன்பு பட்டியிலிட, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த விசாரணையின்போது,

மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் நீதித்துறைக்காகவும், நீதிபதிகளின் ஓய்வு  வயதை உயர்த்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதையும் மூத்த வழக்கறிஞரும் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ் பிரபாகரன் சுட்டிக்காட்டினார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்