மதுரை: நீட் தேர்வை எதிர்த்து இன்று திமுக சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் மதுரையில் மட்டும் நடைபெறவில்லை. இன்றைக்குப் பதில் 23ம் தேதி அங்கு உண்ணாவிரதம் நடைபெறும்.
நீட் தேர்வை எதிர்த்து இன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இருப்பினும் மதுரையில் உண்ணாவிரதம் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இன்று அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் திமுகவின் போராட்டம் நடைபெற்றால் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படலாம் என்பதால் மதுரையில் மட்டும் போராட்டம் நடைபெறவில்லை. மாறாக ஆகஸ்ட் 23ம் தேதி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். நீட் தேர்வு விலக்கு கோரியும் மத்திய அரசு மற்றும் ஆளுநரை கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}