மதுரை லேடீஸ் விடுதியில் தீ விபத்தில்.. காயமடைந்த.. ஹாஸ்டல் வார்டன் புஷ்பா மரணம்

Sep 17, 2024,04:55 PM IST

மதுரை: மதுரை கட்ராபாளையத்தில் பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதி மேலாளர் புஷ்பா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம்  பகுதியில் விசாகா என்ற மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதி 30 ஆண்டுகள் ஆன பழமையான கட்டடத்தில் இயங்கி வந்துள்ளது. இந்த விடுதியில் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்துள்ளனர்.இந்தக் கட்டடம் பலவீனமாக இருப்பதால் இதைக் காலி செய்ய வேண்டும் என்று கடந்த வருடமே மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 



ஆனாலும் விடுதி உரிமையாளர் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட விடுதிக் கட்டடத்தை மாநகராட்சியால் இடிக்கப்பட்டது. மேலும், இந்த தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா ஜெகதீஸ் மற்றும் விடுதி காப்பாளரான புஷ்பா ஆகிய இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விிசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்னர் விடுதியில் உள்ள ரெப்ரிஜிரிரேட்டரில் மின்கசிவு ஏற்பட்டு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பரிமளா சௌத்ரி மற்றும் சரண்யா ஆகிய இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று தீக்காயங்களுடன்  அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

சிகிச்சைப் பெற்று வந்த 3 பேரில் விடுதி மேலாளர் புஷ்பா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்த தீ விபத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை  3 ஆக உயர்ந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்