மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

Apr 24, 2026,05:19 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


2026 ஆம் ஆண்டிற்கான மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சித்திரை மாதம் 15 ஆம் நாள் கோலாகலமாக நடைபெற உள்ளது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்கு, மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில்  அம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.


ஏப்ரல் 28ஆம் தேதி காலை 08:35 மணிக்கு மேல் 08:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ. 500 கட்டண சீட்டுகள் வைத்திருப்பவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணமில்லா தரிசன முறையில் வரும் பக்தர்கள் முதலில் வருபவர்களுக்கே அனுமதி என்ற முறையில் தெற்கு கோபுரம் வழியாகவும் திருக் கல்யாணத்தைக் காண அனுமதிக்கப்பட உள்ளனர்.


மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரில் தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய மதுரை சித்திரை திருவிழாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும்,ஏப்ரல் 28ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 29ஆம் தேதி தேரோட்டமும், மே 0 1ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளது.


மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வரலாறு:




பாண்டிய மன்னன் மலையத்துவஜன் - காஞ்சனா மாலை தம்பதியருக்கு குழந்தை வேண்டி செய்த யாகத்தில் இருந்து மூன்று தனங்களுடன் தடாதகை பிராட்டியார் தோன்றினார்.  மணப்பருவத்தில் சரியான கணவனை சந்திக்கும் போது மூன்றாவது தனம் மறையும் என்ற இறைவன் கூற்றின்படி (அசரீரி ) தடாதகை மதுரையின் அரசியாக முடிசூடி திக் விஜயம் செய்து உலகை வென்றாள். இறுதியாக கைலாயத்தில் சிவபெருமானை எதிர்த்து போரிட்டார். சிவனைப் பார்த்ததும் நாணத்துடன் மூன்றாவது தனம் மறைந்தது. சிவனும் சுந்தரேஸ்வரராக மதுரைக்கு வந்து முறைப்படி திருமணம் புரிந்து கொண்டார்.


வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு சுந்தரேஸ்வரருடன் திருமணம் சிறப்பாக நடைபெறுகிறது.


மீனாட்சி அம்மன் திருக்கல்யாண சிறப்புகள்:


மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவில் 10 ஆம் நாளில் மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் தெய்வீக திருமணத்தை முன்னிட்டு, மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவிலை சுற்றிலும் மதுரையின் பல பகுதிகளிலும் மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு கல்யாண விருந்துகள் ஏற்பாடு செய்யப்படும்.


மீனாட்சி அம்மன் தெய்வீக திருமணம் நடைபெறும் சமயத்தில் பெண்கள் தங்களுடைய  தாலிச் சரடு மாற்றிக் கொள்வது காலம் காலமாக நடைபெறும் வழக்கம். இந்த தெய்வீக திருமண நன்னாளில் தங்களுடைய தாலிச் சரடு  மாற்றிக் கொள்ளும் பொழுது மீனாட்சியம்மன் தீர்க்க சுமங்கலி பாக்கியம் அருள்வாள் என்பது நம்பிக்கை. மேலும் திருமண பாக்கியம் கைகூடாமல் சரியான வரன் அமையவில்லை என திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் நேரில் தரிசித்தால் அவர்களுக்கு விரைவில் அடுத்த வருடம் நடைபெறும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்குள் அவர்களுடைய திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.


இந்த தெய்வீக திருக்கல்யாணத்தை தரிசிக்கும் பக்தர்களுக்கு திருமண வரம், குடும்ப மகிழ்ச்சி மற்றும் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்