சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கம் மதுரையில் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி சிறப்பாக பணியாற்றி வருகிறார். அதன்படி, தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டத்தைக் கடந்த மார்ச் மாதம் நடத்திய விஜய் அதிமுகவையும் பாஜகவையும் தாக்கி அனல் பறக்க பேசி இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும். அதனை தொடர்ந்து தவெகவின் சுற்றுப்பயணம் இருக்கும் என அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பூத் கமிட்டி மாநாட்டை மண்டல வாரியாக நடத்த திட்டமிட்டு இருந்தார். அதில் முதல் வாக்குசாவடி கருத்தரங்கம் கோவையில் ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 7 மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் பங்கேற்க சென்னையிலிருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல் கோவையில் ரோடு ஷோ நடத்திய விஜய்க்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் புடை சூழ உற்சாகமாக வரவேற்பு அளித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
முதல் நாள் கூட்டத்தில், இது ஓட்டுக்காக மட்டுமே நடக்கும் மாநாடு இல்லை. இதுவரை மற்றவர்கள் செய்ததைப்போல நாம் செய்யப்போவது இல்லை. நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பதே மக்களுக்காகத்தான்.மக்களோடு மக்களாக நாம் எப்படி ஒன்றிணைய போகிறோம் என்பதற்காக தான் இந்த பயிற்சி பட்டறை என பேசியிருந்தார்.
இதனைதொடர்ந்து இரண்டாவது நாள் கூட்டத்தில், தவெக வெறும் ஓட்டுக்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் துவங்கப்பட்ட கட்சி கிடையாது. இங்கு சமரசம் எனும் பேச்சுக்கே இடமில்லை. அதேசமயம், மக்களுக்கு நல்லது நடக்கிறது என்றால், எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயங்கமாட்டோம்.நமது ஆட்சியில் ஊழலும், குற்றவாளிகளும் இருக்கமாட்டார்கள். எனவே எந்த தயக்கமும் இன்றி நமது பூத் ஏஜெண்ட்கள் மக்களைச் சந்தியுங்கள்
நீங்கள் தான் முதுகெலும்பு. நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் எனவும் பதிவிட்டு இருந்தார். விஜய்யின் சீறிய பேச்சை தொண்டர்களும், நிர்வாகிகளும் கரகோஷத்துடன் உற்சாகமாக ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் அடுத்த பூத் கமிட்டி மாநாடு மதுரையில் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இந்த பூத் கமிட்டி மாநாடு மே முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது மதுரை கொடைக்கானல் செல்லும் சாலையில் இடம் தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரையில் சித்திரைத் திருவிழா களைகட்ட துவங்கி உள்ள நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தவெகவின் பூத் கமிட்டி மாநாடும் சித்திரை திருவிழாவின்போது நிகழ இருப்பதால் மேலும் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
{{comments.comment}}