டெல்லி: உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜின் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புனித நீராடினார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் 144 வருடங்களுக்குப் பிறகு வரும் மகா கும்பமேளா மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்பட்டு வருகிறது. இந்த வருடம் வந்துள்ள கும்பமேளா நிகழ்ச்சி 144 வருடங்களுக்குப் பிறகு வரும் கும்பமேளாவாகும். இதில், கோடிக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர். இந்த கும்பமேளா கடந்த மாதம் ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி நிறைவடைகிறது. பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இதுவரைக்கும் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய இந்த ஆன்மீக நிகழ்வில் ஜனாதிபதி திரவுதி முர்மு இன்று பங்கேற்று புனித நீராடினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று பிரயாக்ராஜூக்கு வந்த அவரை, உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக படகில் பயணித்த திரவுபதி முர்மு, முதலில் அங்குள்ள பறவைகளுக்கு உணவளித்தார். அதை அடுத்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும், தெலுங்கானா அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கோமதிரெட்டி வெங்கட் ரெட்டியும் திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடினார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி பிரதமர் மோடி 3 முறை மூழ்கி எழுந்து புனித நீராடி வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் புனித நீராடியுள்ளார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை
Malliga Selvaraj Poem: கோலங்கள்!
{{comments.comment}}