பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா ஜனவரி 13ம் தேதி துவங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை மகாகும்பமேளா நடந்து வருகிறது. பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பதால் மகாகும்ப மேளாவில் புனித நீராட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திரிவேணி சங்கமத்தில் அமாவாசை, பஞ்சமி போன்ற நாட்களில் புனித நீராடினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதனால் தை அமாவாசையான இன்று மிக அதிக அளவிலான மக்கள் அதிகாலையிலேயே புனித நீராட குவிந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உலகின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தை அமாவசையான இன்று மட்டும் புனித நீராட கிட்டத்தட்ட 10 கோடிக்கும் அதிகமனோர் கூடி உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. பிரயாக்ராஜில் நிலவும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமித்ஷாவும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் போனில் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்,பிரயாக்ராஜில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அன்புக்குரியோர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரயாக்ராஜில் உள்ள உள்ளூரில் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கும்ப மேளாவில் மீதமுள்ள நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கலந்துரையாடினேன், மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}