சென்னை : புரட்டாசி மாதம் என்பது பெருமாள் வழிபாட்டிற்குரிய மாதமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மேலும் சிறப்பானதாகும். புரட்டாசி மாதம் புதன் பகவானுக்குரி உரியது. புதனுக்குரிய அதிபதி மகாவிஷ்ணு. அதனாலேயே புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்குரிய மாதமாக மாறியது. புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து, வேண்டியது அனைத்தும் நடக்கும். சகல விதமான நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாதத்தில் வரும் மற்றொரு சிறப்பு, முன்னோர்களை வழிபடுவதற்கு ஏற்ற மகாளய பட்சம். மகாளய பட்ச காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் முன்னோர்களின் அருள் முழுவதுமாக கிடைக்கும். இந்த ஆண்டு மகாளய பட்சம் கூடுதல் சிறப்பாக பெருமாளுக்குரிய புரட்டாசி சனிக்கிழமையில் துவங்கி, புரட்டாசி சனிக்கிழமையிலேயே நிறைவடைகிறது. மகாளய பட்சம் துவங்கும் செப்டம்பர் 30 ம் தேதியும் புரட்டாசி சனிக்கிழமையில் வருகிறது. மகாளய அமாவாசையும் புரட்டாசி சனிக்கிழமை அன்றே வருகிறது.
மகாளய பட்சம் புரட்டாசி சனிக்கிழமையில் துவங்குவதற்கு தனியான ஒரு சிறப்பு உள்ளது. இந்தியாவில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதற்கு ஏற்ற புண்ணிய தலங்களில் மிக முக்கியமானது கயா. காசியிலும், கயாவிலும் இறந்த முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து வழிபட்டால் அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். எத்தனை அடி கயாவை நோக்கி நாம் நடந்து செல்கிறோமோ அத்தனை தலைமுறையினருக்கும் பிரம்ம லோகத்தில் இடம் உண்டு சாஸ்திரங்கள் சொல்கின்றன.
கயாவில் நாராயணனரை சாட்சியாக வைத்து பிண்டம் பிடித்து தர்ப்பணம் கொடுத்து விட்டால் அதற்கு பிறகு வேறு எங்கும், எப்போதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என சொல்லப்படுகிறது. கயாவில் முன்னோர் தர்ப்பணம் கொடுத்து விட்டு, விஷ்ணு பாதத்தை வணங்கினால் அவர்களின் அத்தனை பாவங்களும் நீங்கி விடும் என்பது ஐதீகம். அதனால் பெருமாளுக்குரிய புரட்டாசி சனிக்கிழமையில் மகாளய பட்சம் துவங்குவது மிகவும் சிறப்பானதாகும்.
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும். அதோடு குலதெய்வ அருளும் நமக்கு கிடைக்கும். புரட்டாசி சனிக்கிழமையில் மாவிளக்கு ஏற்றி என்ன வேண்டுதல் வைத்தாலும் அது அப்படியே நடக்கும் என்பது ஐதீகம்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}