சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தினை சீனா முழுவதும் திரையரங்குகளில் வரும் 29ஆம் தேதி ஒய் சி பிலிம்ஸ் நிறுவனம், அலிபாபா பிக்சர்ஸ் உடன் இணைந்து வெளியிடுகிறது.
இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் தான் மகாராஜா. இப்படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. அதேபோல் வசூலிலும் 100 கோடிக்கு மேல் வாரி குவித்தது.
குப்பைத் தொட்டியை மையமாகக் கொண்டு உருவாகிய கதை நகர்வில் நடிகர் விஜய் சேதுபதி தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் கடைசி பத்து நிமிட காட்சிகளில் பல தரப்பு மக்களிடையே பாராட்டு பெற்றார். இயக்குனர் நித்திலனும் கடைசி 10 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகளில் டிவிஸ்டுக்கு மேல் டுவிஸ்ட் வைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பார்.
ஃபேஷன் ஸ்டூடியோஸ் திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ரூட் நிறுவனங்கள் தயாரிப்பில் பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இப்படம் நடிகர் விஜய் சேதுபதிக்கு 50-வது திரைப்படம். இவருடன் அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் சிங்கம் புலி கதாபாத்திரமும் இவரா அது என அதிர வைத்தது. அந்த அளவுக்கு படத்தின் அடுத்தடுத்த கதை நகர்வுகள் படத்திற்கு பிளஸ்.
மகாராஜா திரைப்படம் மாறுபட்ட கதைக்களத்தில், அதிரடியான இசை, அற்புதமான காட்சி அமைப்பு, என சொல்லிக்கொண்டே போகலாம். விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனாவின் நடிப்பும் அபாரமாக இருந்தது. இப்படம் ஜூலை 12ஆம் தேதி ஓடிடியில் வெளியாகி அதிகமான பார்வையாளர்களைப் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.
மெல்போன் திரைப்பட விழாவில், திரையிட்ட மகாராஜா திரைப்படத்திற்கான சிறந்த இயக்குனருக்கான விருதையும் தட்டிச் சென்றார் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். அனைத்து தரப்பிலும் பல்வேறு பாராட்டுகளை குவித்த மகாராஜா படத்தை ஒய்.சி ஃபிலிம்ஸ் நிறுவனம் அலிபாபா பிக்சர்ஸ் உடன் இணைந்து தமிழ் இந்திய கலாச்சார பண்முகத் தன்மையை உலகமெங்கும் அறிமுகப்படுத்தும் நோக்கில் சீனா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளி வர தயாராக இருக்கிறது.
இதற்காக திரைப்பட ஆர்வலர்கள் உள்ளூர் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பு விளம்பரங்கள் மற்றும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து Yi Shi Films நிறுவனத்தைச் சேர்ந்த அலெக்ஸி வூ கூறுகையில், மகாராஜாவை சீனாவிற்கு கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படம் மூலம் சீனாவில் தமிழ் சினிமாவின் கலைத்திறனை, புதிய பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. அலிபாபா பிக்சர்ஸ் உடன் இணைந்து, உலகின் சிறந்த சினிமாக்களை, உலகம்
முழுக்கவுள்ள பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி என கூறியுள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறுகையில், மகாராஜா எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சியான படைப்பாகவும், பெருமையின் அடையாளமாக மாறியது. சிறந்த கதையம்சம் கொண்ட நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை, பல்வேறு பின்னணியில் உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும்படியான படங்களை, உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். மகாராஜா பெரும் அன்பையும், வரவேற்பையும் பெற்றது.
தற்போது இப்படம் சீனாவில் உள்ள ரசிகர்களைக் கவரும் வகையில், நவம்பர் 29 ஆம் தேதி வெளியாவது மகிழ்ச்சி. மகாராஜா படத்தினை சீனாவில் மிகப்பெரிய அளவில் வெளிடுயிடும் Yi Shi Films மற்றும் Alibaba Pictures நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நன்றி. உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன், அதிரடி திருப்பங்களுடன் இப்படம் சீனா ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். சீன ரசிகர்களது வரவேற்பைக் காண ஆவலுடன் உள்ளோம். இந்த நேரத்தில் இப்படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கிய விஜய் சேதுபதி, இயக்குநர் நித்திலன் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் அலர்ட்!
ரஜினியை சந்தித்த சிம்ரனின் நெகிழ்ச்சி பதிவு... இணையத்தில் வைரல்!
2026ல் தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது: விசிக தலைவர் திருமாவளவன்
வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!
வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!
2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!
{{comments.comment}}