டோக்கியோ: தைவான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தைவான், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
7.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் இருந்தது. தைவான், தெற்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளை சுனாமி அலைகள் தாக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு இந்த நிலநடுக்கம் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு தைவானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்குக் கீழே 34.8 கிலோமீட்டர் ஆழத்தில இதன் மையம் இருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் 10 அடி உயரம் வரையிலான சுனாமி அலைகள் தாக்கலாம் என்று ஜப்பான் பூகம்பவியல் கழகம் எச்சரிக்கை விடுத்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பூகம்பத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து இன்னும் முழுமையாக தெரியவில்லை.
தைவான் முழுவதும் இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு தெரிந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக தெற்கு பிங்டுங் நகரிலிருந்து தலைநகர் தைபேவின் வடக்கு வரை நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியேறினர். மிகப் பெரிய முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து சில பூகம்பங்கள் பதிவாகியுள்ளன. அதில் ஒன்று 6.5 ரிக்டர் அளவில் ஹுவாலியன் நகருக்கு அருகே பதிவானது. இது தலைநகர் தைபேவுக்கு அருகில் உள்ள நகரமாகும்.
குலுங்கிய சாலை - அதிர வைக்கும் வீடியோ
பூகம்பத்தைத் தொடர்ந்து தைபே நகரில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் மீண்டும் தொடங்கியது. வழக்கமாக ஏற்படுவதை விட இது சக்தி வாய்ந்ததாகும். கடந்த 1999ம் ஆண்டுதான் தைவானில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதன் பிறகு இப்போதுதான் சக்தி வாய்ந்த பூகம்பம் தைவானை தாக்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
1999ம் ஆண்டு 7.6 ரிக்டர் அளவிலான பூகம்பம் தைவானைத் தாக்கியது. அதில் 2400 பேர் உயிரிழந்தனர். பெரும் பொருட்சேதத்தையும் தைவான் சந்தித்தது என்பது நினைவிருக்கலாம். தைவான் வரலாற்றில் அதுதான் மிகப் பெரிய இயற்கைப் பேரிடர் தாக்குதல் ஆகும்.
தைவான், ஜப்பானைப் போலவே அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் தீவு நாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}