கோயம்பத்தூர்: பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி என்று கூறியவர்கள் இன்று கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள் என்று அதிமுகவை மறைமுகமாக கடுமையாக சாடியுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், அதிமுக கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறுகையில், பாஜக தீண்டத்தகாத கட்சி, பாஜக நோட்டா கட்சி, பாஜக வந்ததால்தான் தோற்றோம் என்று கூறியவர்கள் இன்று கூட்டணிக்காக தவம் இருக்கும் சூழலை உருவாக்கியுள்ளோம். இதற்காக பெருமைப்படுகிறோம். பாஜக இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கியுள்ளோம்.
கடந்த ஐந்து வருட கால நிகழ்வுகளைப் பாருங்கள். எங்களை எப்படியெல்லாம் விமர்சித்தனர். இன்று எங்களுக்காகக் காத்துள்ளனர். அந்த அளவுக்கு உழைத்திருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையாக இருக்கும், வலிமையாகிக் கொண்டிருக்கிறது. சரியான நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். மோடி இருக்கிறார், அமித்ஷா இருக்கிறார். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
நாங்கள் தேசியக் கட்சி. எங்களை நம்பி வந்தவர்களை விட்டு விட முடியாது. தினகரன் போன்றவர்கள் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கின்றனர். அவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். இன்று பஸ்சில் ஏறுங்கள், காலையில் இறக்கி விட்டு விடுகிறோம் என்று சொல்ல முடியாது. எனவே கூட்டணி வலிமையாகிக் கொண்டிருக்கிறது என்று கூறினார் அண்ணாமலை.
சில நாட்களுக்கு முன்புதான் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அதிமுக உள்பட யாருமே எங்களுக்கு எதிரி இல்லை என்று கூறியிருந்தார். அதேபோல முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக மட்டுமே தங்களுக்கு எதிரி என்று கூறியிருந்தார். இதனால் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் எழுந்தன.
அதேசமயம், அதிமுக தரப்பிலிருந்து பாஜகவை அணுகியதாகவும் கூறப்படுகிறது. அப்போது தினகரன், ஓபிஸ்ஸை தவிர்த்தால் கூட்டணி வைக்கலாம் என்று அதிமுக தரப்பிலிருந்து செய்தி ஏதேனும் போனதா என்று தெரியவில்லை. அப்படிப் போனதால்தான் இன்றைய பிரஸ்மீட்டில் அதிமுகவை கடுமையாக மறைமுகமாக அண்ணாமலை சாடினாரா என்றும் தெரியவில்லை. மேலும் தினகரன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்போம் என்று அவர் கூறியது, அதிமுகவுக்கு விடுக்கப்பட்ட நேரடியான செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.
ஜெயக்குமார் பிரஸ் மீட்டில் இதற்கு ஏதாவது பதில் கிடைக்கும்.. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?
வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!
மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!
நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!
கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!
Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!
{{comments.comment}}