பாகிஸ்தானில் திடீர் மின் தடை.. இஸ்லாமாபாத், கராச்சி,லாகூர் ஸ்தம்பிப்பு

Jan 23, 2023,01:55 PM IST
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின் தடை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இன்று காலை உள்ளூர் நேரப்படி 7.35 மணிக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. தேசிய  மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் பல மணி நேரம் மின்சாரம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டன.

மின்விநியோகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், உள்ளூர் நேரப்படி 7.34க்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. 

சில ஊர்களில் மின் விநியோகம் சரியானதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அங்கு மின்சாரம் சரியாக வரவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.  அரை கரண்ட்டாக வருவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். நிலைமை இன்னும் சரியாகவில்லை என்பதால் பாகிஸ்தானில் பரபரப்பு தொடர்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

news

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்