பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

Apr 18, 2026,06:16 PM IST

- சிவ. ஆ. மலர்விழி ராஜா, சீர்காழி 


மெல்லிய பூங்கொடி அசைவது போல்


அவளது நடையும்  காற்றில் அசைந்து மெதுவாக நடந்து.... 


தூரத்தில் தெரியும் அவனது உருவம் அவளை நெருங்கி வருவது போல் 


அவனது அருகில் அவள்  சென்றாள். 


உனக்காக தான் காத்திருக்கேன்    அவனது குரல் மிக மெதுவாகவே  கேட்டது. 


நான் எத்தனை முறை சொல்வது...? 


இப்படி என் பின்னால் வராதே என்றாள்..


பூவிதா...!  நான் உன்னை நேசிக்கிறேன்.


திரும்பியவள்  சற்றே நின்றாள். உனக்கு என்னதான் பிரச்சனை  .....? 

தயவு செய்து என் பின்னால் வராதே.,..! 




பார்ப்பவர்கள் என்னை தவறாக நினைப்பார்கள்

ப்ளீஸ்.... என்றாள் பூவிதா..... 


சரி நான் வரவில்லை

என்றவன் சிறிது பேச்சை நிறுத்திவிட்டு 

உன்னை பெண் கேட்க போகிறேன் என்றான் சதீஷ். 


அவளுக்கு மூச்சே நின்று விடும் போல்

தோன்றியது. 


நான் படிக்க வேண்டும்

மீண்டும் மீண்டும்

சொல்கிறேன். 

தயவு செய்து என்னை படிக்க விடு. 


அவள் கெஞ்சுவது போல் பேசினாள். 


நீ என்ன வேணா படி

ஆனால் என்னைத் தான்

நீ திருமணம் செய்ய வேண்டும்  என்றான் சதீஷ். 


பின்னால் ஒரு குரல்


என்னம்மா யார் இந்த பையன்.....?


குரல் கேட்டதும் சட்டென்று திரும்பினாள் பூவிதா.... 


அப்பாவின் மிக நெருங்கிய நண்பர். 


இல்லை அங்கிள் இவர்..... 

தயங்குவதை  உணர்ந்த அவர் 

சரி சரி காலேஜ்க்கு நேரமாகலையா 

நான் வேணா வந்து விடட்டுமா ....?


அவன் வெகு தூரம் செல்வதை  கண்டு

அவரை நன்றி கலந்த பார்வையில்


தேங்யூ அங்கிள் என்றாள். 


நிம்மதி பெருமூச்சுடன்

காலேஜ் சென்று வந்தவளுக்கு அப்பாவின் குரல் கேட்டு

அதிர்ந்து நின்றாள்

பூவிதா...!


(தொடரும் பூங்காற்று)


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!

news

விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!

news

தேனிசை வானில் கலந்தது!

news

ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

news

இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!

news

களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

news

காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!

news

தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!

news

கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!

அதிகம் பார்க்கும் செய்திகள்