கொச்சி: மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பு நடந்த தேர்தலில் போட்டியின்றி 3வது முறையாக தலைவராக நடிகர் மோகன்லால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மலையாள நடிகர் சங்கம் அம்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அந்த அமைப்பின் பொதுச் செயலாளராக 8 முறை இருந்தவர் நடிகர் பாபு. இவர் தானாக முன்வந்து தனது பதவியை நிறைவு செய்தார். அத்துடன் இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்தார். இவருக்கு பின்னர் நடிகர் சித்திக் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகர் குக்கு பரமேஸ்வரன், உண்ணி சிவபால் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் நடிகர் சித்திக் நடிகர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தலைவர் பதவிக்கு பலர் போட்டியிட்டனர். அப்போது நடிகர் மோகன்லால் தேர்தலில் போட்டியிட தயாரான உடன் மற்றவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து மனுவை வாபஸ் பெற்றனர். அன்றிலிருந்து இன்று வரை நடிகர் மோகன்லால் போட்டியின்றி மலையாள நடிகர் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். அம்மா அமைப்பின் வருடாந்திர பொதுக்கழு கூட்டம் கொச்சியில் உள்ள கோகுலம் கருத்தரங்க மையத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து திரைப்பிரபலங்கள் வந்து கலந்து கொள்வார்கள்.
மோகன்லால், மஞ்சு வாரியர், விஜய் பாபு, லால், இந்திரஜித் டொவினோ தாமஸ், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான வாக்களிப்பும் நடைபெற்றது. அதில், இம்முறையும் நடிகர் மோகன்லால் எதிர்ப்பின்றி அம்மா அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளர் பதவிக்கு உன்னி முகுந்தன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக நடிகர் சித்திக் தேர்வு செய்யப்பட்டார்.
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
{{comments.comment}}