திருவனந்தபுரம்: மலையாள டிவி கலைஞர்களான கிருஷ் வேணுகோபாலும், திவ்யா ஸ்ரீதரும் திருமணம் செய்து கொண்டதை சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஏன் இந்த திருமணத்தை விமர்சிக்கிறார்கள் என்ற கேள்வி வரலாம்.. காரணம் இவர்களின் வயது வித்தியாசம்.
மலையாள சின்னத்திரையில் பிரபலமானவர்கள் வேணுகோபாலும் திவ்யாவும். இருவரும் பத்தரமாத்து என்ற தொடரில் நடித்தபோது காதல் கொண்டனர். இந்தக் காதல் வலுவடைந்து தற்போது திருமணத்தில் முடிவடைந்துள்ளது. திவ்யாவுக்கு இது 2வது திருமணமாகும். முதல் திருமண் மூலம் அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

திவ்யா- கிருஷ் திருமணம் குருவாயூரில் சிம்பிளாக நடந்தது. இரு வீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். இந்தத் திருமணம் சமூக வலைதளங்களில் பலராலும் டிரோல் செய்யப்பட்டு வருகிறது. காரணம் இவர்களின் வயது வித்தியாசம். கிட்டத்தட்ட இருவருக்கும் இடையே 10 வயது வித்தியாசம் உள்ளது. கிருஷுக்கு 50 வயதாகிறது, திவ்யாவுக்கு 40 வயதாகிறது. இதனால்தான் இவர்களது திருமணத்தை டிரோல் செய்கின்றனர்.
ஆனால் இதுகுறித்து எங்களுக்குக் கவலை இல்லை.. எங்களை கேலி செய்வோருக்கு எங்களது வாழ்த்துகள் என்று கூறி அதிரடி காட்டியுள்ளனர் திவ்யாவும், கிருஷ்ஷும். கிருஷ் வேணுகோபால் நடிகர் மட்டுமல்லாமல் புத்தகமும் எழுதியுள்ளார். வாய்ஸ் ஆர்ட்டிஸ்ஸ்டாகவும் இருக்கிறார். மறுபக்கம் திவ்யா பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். நெகட்டிவ் ரோல்களிலும் கலக்கியவர். பத்தரமாத்து தொடரிலும் கூட நெகட்டிவ் ரோலில்தான் நடித்திருந்தார் திவ்யா.
தனது திருமணம் குறித்து திவ்யா கூறுகையில் வாழ்க்கையில் நான் நிறைய பார்த்து விட்டேன். இந்தத் திருமணத்தையும் கேலி செய்யவே செய்வார்கள். குடும்பத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்று கூட சொல்வார்கள். உண்மையில் எனக்கு எனது குடும்பத்தார் ஆதரவாக உள்ளனர். அவர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது என்றார் திவ்யா.
இரு மனம் இணைவதுதானே திருமணம்.. இதை ஏன் கேலி செய்ய வேண்டும்.. வயது வித்தியாசம் இரு மனங்களின் இணைப்புக்கு எப்படி இடையூறாக இருக்க முடியும். உருவத்தையும், வயதையும் வைத்து கிருஷ் வேணுகோபாலை பலரும் கிண்டல் செய்வதற்கு பலர் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!
ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!
பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி
தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"
{{comments.comment}}