"மத்தியப் படைகளை அனுப்பி.. கலவரத்தைத் தூண்டுங்க".. பாஜகவை விளாசிய மமதா பானர்ஜி

Apr 04, 2023,12:55 PM IST
கொல்கத்தா: மத்தியப் படைகளை கலவரத்தைத் தூண்டுவதற்காகவே மத்திய அரசு அனுப்புகிறது என்று கூறியுள்ளார் மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி.

பூர்பா மெதின்பூருக்கு வருகை தந்த மமதா பானர்ஜி அங்கு மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்,  மத்தியப் படையினர் வந்தனர். 5 ஸ்டார் ஹோட்டல்களில் தங்கினர். கலவரத்தைத் தூண்டி விட்டு சென்றனர். பின்னர் பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.



வருகிற பஞ்சாயத்துத் தேர்தலிலும், 2024 லோக்சபா தேர்தலிலும் பாஜகவுக்கு மக்கள் ஓட்டுப் போடக் கூடாது. மறந்தும் கூட அந்தத் தவறை செய்து விடாதீர்கள். உங்களுக்காக நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன், செய்வேன். பாஜகவை மட்டும் ஆதரிக்காதீர்கள். அது கலவரத்தைத் தூண்டும் கட்சி என்றார் மமதா பானர்ஜி.

ஹூக்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக யாத்திரையின்போது பெரும் கலவரம் வெடித்தது. அதேபோல ஹவுராவில் நடந்த ராம் நவமி கொண்டாட்டத்தின்போதும் கலவரம் வெடித்தது என்பது நினைவிருக்கலாம்.

இந்தக் கலவரம் தொடர்பாக திரினமூல் காங்கிரஸும், பாஜகவும் சரமாரியாக பரஸ்பரம் புகார்களைக் கூறி வருகின்றன. இந்தக் கலவரம் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணை நடைபெற வேண்டும் என்று மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அழியா காதலில் நீயும் நானும்

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

காலம் பொன் போன்றது

news

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

news

அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கழுதைக்குத் தெரியுமா??

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

நன்றி சொல்லவே எனக்கு.. நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.. மனசுக்கு நல்லது!

news

சப்தம் இல்லாமல் இருந்தால் கிடைப்பது.. அமைதி அல்ல!

news

World Rose Day: உலக ரோஸ் தினம் ஏன் இன்னிக்கு கொண்டாடுறோம் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்