கொல்கத்தா: டிரட்மில்லில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைப் போட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. அதில் என்ன விசேஷம் என்றால் ஒரு நாய்க்குட்டியையும் கையில் பிடித்தபடி அவர் டிரட்மில்லில் ஓடுகிறார்.
தலைவர்கள் என்ன செய்கிறார்களோ இல்லையோ அவ்வப்போது ஏதாவது ஒரு உடற்பயிற்சி வீடியோவைப் போட்டு விடுகிறார்கள். அவர்கள் அதைப் போட்ட அடுத்த நிமிடமே.. "இது உடலா இல்லை இரும்பா.. தலைவா" என்று நாடி நரம்பெல்லாம் முறுக்கேற கமெண்ட்டுகளைத் தட்டி விட்டு தடபுடலாக அதை வைரலாக்கி விடுவார்கள் தொண்டர் பெருமக்கள்.
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் இதுபோல ஒரு வீடியோவைப் போட்டுள்ளார். ஒரு டிரட்மில்லில் அவர் ஓடுவது போன்ற வீடியோ அது. அவர் ஓடுவதில் விசேஷம் இல்லை.. மாறாக அவரது கையில் ஒரு நாய்க்குட்டி இருக்கிறதே அதுதான் ஸ்பெஷல்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சில நேரம் நமக்கு எக்ஸ்ட்ரா மோடிவேஷன் தேவைப்படுகிறது என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் மமதா. இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து கொண்டுள்ளன. ஆனால் கமெண்ட் போடும் ஆப்ஷனை பூட்டி வைத்துள்ளார் மமதா பானர்ஜி.
டிரட்மில்லில் ஓடினாலும் கூட உடற்பயிற்சிக்கான உடையை அணியவில்லை மமதா. வழக்கம் போல தனது வெள்ளைச் சேலையைத்தான் அணிந்தபடி ஓடுகிறார்.
உடற்பயிற்சி மீது அக்கறை கொண்டவர் மமதா. உடற்பயிற்சி செய்யுங்கள் என்று பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லவது அவரது வழக்கம். 2019ம் ஆண்டு உடல்நல விழிப்புணர்வுக்காக அவர் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு ஜாகிங் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார் என்பது நினைவிருக்கலாம்.
மமதா பானர்ஜிக்கு தற்போது 68 வயதாகிறது. கடந்த 50 வருடமாக அரசியலில் இருந்து வருகிறார். முன்பு கம்யூனிஸ்டுகளை எதிர்த்துப் போராடினார்.. இப்போது பாஜகவுடன் மோதிக் கொண்டிருக்கிறார். கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக வீழ்ந்தால் பெரும் மகிழ்ச்சி அடைவேன் என்று சமீபத்தில் மமதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}