- ஸ்வர்ணலட்சுமி
சேலத்து மாம்பழம், தித்திக்கும் மாம்பழம் அப்படின்னு சின்ன வயசு பாடம் படிச்சிருப்போம்.. இப்போது மாம்பழ சீசன் வந்தாச்சு.. களை கட்டியிருக்கு கடைகளும் தோட்டங்களும்.
முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். இதில் உயிர்ச்சத்து" ஏ "உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. மேலும் இதனுடைய பயன்களை விரிவாக பார்ப்போம் வாருங்கள்...
மாம்பழம் சுவையான பழம் மட்டுமல்ல பல நன்மைகளும் கொண்ட ஒரு சத்தான உணவு ஆகும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் உள்ளன. மாம்பழம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

* மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன அவை இதை ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
* மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் .இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.
* மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
* இதில் லூடின் மற்றும் ஜெக்ஸாந்தின் போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன .அவை கண் பார்வையை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
* இரும்பு சத்து அதிகம் உள்ளதால் மாம்பழம் உட்கொள்வதினால் ரத்த சோகையை குறைக்க உதவுகிறது.
* மாம்பழத்தில் குறைந்த கலோரிகள் அதிக சத்துக்கள் உள்ளது. எனவே ,இது எடை கட்டுப்படுத்த உதவுகிறது.
இப்பழத்தில் உள்ள பாலி பினால்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. மேலும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
நன்றாக பழுத்த மாம்பழத்தை விட மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை அளவாகவே உண்ண வேண்டும். மேலும் மாம்பழ ஜூஸ் களை அவர்கள் முற்றிலும் தவிர்ப்பது நன்மை தரும்.
மேலும் மாம்பழத்தில் மேக்னீஃபெரின் என்ற பயோ ஆக்டிவ் கலவை உள்ளது இது பல நோய்களை எதிர்த்து போராட நம் உடலுக்கு உதவி செய்கிறது. இதில் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது .மேலும் காப்பர் போன்ற கனிமங்களும் வளமாக காணப்படுகிறது.
இதில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவுகிறது.
மாம்பழத்தை எப்படி உண்ணலாம்?...
மாம்பழத்தை காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து சிறிது சர்க்கரை சேர்த்து ஜூஸ் எடுத்து சாப்பிட அமிர்தமாக இருக்கும். ஸ்மூதி ,கேக், ஐஸ்கிரீம், கேண்டி , ஃபலூடா, மேலும் அப்படியே கட் செய்து சாப்பிட்டாலும் அருமையாக, சுவையாக இருக்கும்.
கோடைக்காலத்தில் மாம்பழ சீசன் இருக்கும் பொழுதே மாம்பழம் வாங்கி சுவைப்போம். மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
கொந்தளித்த திருமாவளவன்.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல்!
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
"தலஜோ".. சாலமன் பாப்பையா ஐயாவின் மறக்க முடியாத வகுப்பறை நினைவுகள்!
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
Vinayagar Chathurthi Special: அழகான அலங்காரம்.. மஞ்சள் பிள்ளையார் செய்வது எப்படி?
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)
{{comments.comment}}