புதுடில்லி: நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. மக்களவையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பிக்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவையில் இரு இளைஞர்கள் வண்ணப் புகை குண்டுகளை வீசி பெரும் பரபரப்பு ஏற்படுத்தினர். இதில் சம்மந்த பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் எப்படி இப்படி பாதுகாப்பு குறைபாடுகள் நடந்தது என்று பல்வெறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல்கள் நடந்ததற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சி எம்.பிக்கள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.
லோக்சபாவைப் பொறுத்தவரை முதலில் 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் 33 பேர் சஸ்பெண்ட் ஆனார்கள். இன்று மேலும் 50 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ராஜ்யசபாவையும் சேர்த்து தற்போது 142 எம்.பிக்கல் இதுவரை சஸ்பெண்ட் ஆகியுள்ளனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
இன்று, திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், ஜெகத்ரட்சகன், தனுஷ் குமார், கணேசன் மூர்த்தி, சுப்ரியா சுலே, சசி தரூர் உள்ளிட்ட 50 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை காணாத அளவில் ஒரே கூட்ட தொடரில் 142 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}