- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 8 :
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

பொருள் :
உலகத்தை படைத்த முதல்வனும், அனைத்து உயிர்களுக்கும் நடுநாய்னான தலைவனாகவும், முடிவாகவும் இருப்பவனே! பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரை தவிர உன்னை வேறு யாரால் அறிய முடியும்? உன்னுடைய அடியாளர்கள் உன்னை அறிய வேண்டும் என முயற்சி செய்த போது நீ நெருப்பு பிளம்பாக காட்சி தந்தாய். ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரின் இல்லங்களிலும் எழுந்தருளி இருக்கும் தாராள குணமுடையவனே! கொழுந்து விட்டு எரியும் நெருப்பை போவ்ற திருமேனியாக ஜோதி வடிவமாக காட்சி தந்தவனே! திருப்பெருந்துறையிலும் கோவிலை என்னுடைய கண்ணில் காட்டினாய். அந்தணர் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். ஆரமுதானே பெருமானே! இந்த எளியேனுக்கு உன்னுடைய அருளை பரிபூரணமாக வழங்க துயில் எழ வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
No Sunday leave for Women: தினம்தினம் தொடர்கதையே!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
தேவாதி தேவா.. தெருவோர கானாவை தேனாக்கியவரே!
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
{{comments.comment}}