திருவெம்பாவை பாசுரம் 06 :
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்

பொருள் :
மான் போன்று அழகாக துள்ளி ஓடும் பெண்ணே நாளை நான் வந்து உங்களை எழுப்புகிறேன் என்று நீ சொன்ன வார்த்தைகள் எங்கு போனதென்று தெரியவில்லை. எங்களிடம் சொன்னது கூட நினைவில்லாமல் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாரே. உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா? விண்ணில் உள்ளவர்களும், பூமியில் வசிப்பவர்களும், இன்னும் தெரியாத உயிரினங்களும் கூட நெருங்க முடியாத நம்முடைய இறைவன் சிவ பெருமான் நமக்காக தானே வந்து அருள் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார். அவரின் அருளை பெறுவதற்காக வானவர்கள் அவரை புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் அவரை போற்றி பாடிக் கொண்டிருக்கிறோம். வந்து உன்னுடைய கதவை திற. நீ கதவை திறக்கா விட்டாலும் பரவாயில்லை. நம்முடைய சிவனின் பெருமைகளை நாங்கள் பாடுவதை கேட்டு உள்ளமும், உடம்பும் உருகி விடுகிமே. உன் மனம் உருகாமலா இருக்கிறது என்கிறாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை எழுப்ப வந்த தோழி.
விளக்கம் :
இறைவனின் பெருமைகளை கேட்கும் போது கேட்பவரின் உள்ளம் பக்தியால் உருகி விட வேண்டும். இறைவன் நமக்காக அருள் செய்வதற்கு காத்திருக்கும் போது அவரை போற்றி பாடி, அவரின் அருளை பெறாமல் உலக ஆசைகளில், மாயைகளில் மனிதர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இறைவனின் அருளை பெறுவதற்காக காத்திருக்கும் போது நாம் இப்படி அறியாமை என்னும் தூக்கத்தில் சிக்கிக் கொண்டு இருப்பது சரிதானா என கூறுகிறார் மாணிக்கவாசகர்.
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!
இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!
பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு
சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?
பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!
{{comments.comment}}