திருவெம்பாவை பாசுரம் 16 :
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையா ளிட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்

பொருள் :
கடலில் உள்ள நீர் அனைத்தையும் குடித்து, கருமை நிறமாக காட்சி தருகின்றன மேகங்கள். அவைகள் அன்னை பார்வதி தேவியின் கருமையான நிறத்தை நினைவுப்படுத்துகின்றன. அன்னையின் மெலிந்த இடையை போல் மின்னல் கீற்றுகள் வளைந்து, நெழிந்து ஓடுகின்றன. அம்பிகையின் திருவடியில் அணிந்திருக்கக் கூடிய சிலம்பு முழங்குவதைப் போல் இடி ஓசை முழங்குகிறது.
அன்னையின் அழகிய முகத்தில் உள்ள திருப்புருவங்கள் அசைந்து ஆடுவதைப் போல் வானவில்கள் அழகாக வளைந்துள்ளன. தன்னுடைய கணவன் சிவ பெருமானை பிரியக் கூடாது என்பதற்காக அவரின் உடலில் பாதியாக இருக்கக் கூடிய அன்னை, சிவ பெருமானுக்கு முன்பே வந்து நமக்கு அருள் செய்யக் கூடியவள். அழவில்லாமல் அவள் நமக்கு செய்யும் அருளை போல பெய்து இந்த உலகத்தை மகிழ்விப்பாய் மழையே.
விளக்கம் :
திருவெம்பாவையின் முதல் 15 பாடல்களிலும் சிவ பெருமானின் பெருமைகளையும், சிவ சின்னங்களின் தன்மைகளையும், சிவனடியார்களின் பக்தியை பற்றியும் கூறினார் மாணிக்கவாசகர். சிவனிடம் எப்படி பக்தி செய்ய வேண்டும், என்ன வேண்ட வேண்டும், அவர் நம்மை எப்படி எல்லாம் ஆட்கொண்டு, அளவில்லாத இன்பத்தை தருவார் என்றும் தோழிகள் இருவர் பேசிக் கொள்வதைப் போல் பாடி இருந்தார். ஆனால் தன்னுடைய 16வது பாடலில் சிவனின் ஒரு பாதியாக இருக்கும் பார்வதி தேவியின் அழகையும், அவள் தனது பக்தர்களுக்கு அருள் செய்யும் விதத்தையும் மழை மேகங்களுடன் ஒப்பிட்டு பாடி உள்ளார். பார்வதி தேவி, உலகிற்கே அன்னையாக விளங்கக் கூடியவள். தாயின் அன்பு, கருணை எப்படி இருக்கும் என்பதை மிக அழகாக இந்த பாடலில் எடுத்துரைத்துள்ளார்.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}