திருவெம்பாவை பாசுரம் 17 :
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இம்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

பொருள் :
தேனை சிந்தக் கூடிய அழகி மலர்களை கருமையான கூழ்தலில் சூடிய பெண்களே, சிவந்த தாமரை போன்ற கண்களை உடைய திருமாள், நான்கு திசைகளிலும் தலையை உடைய பிரம்மன், மற்ற தேவர்கள் என எவரும் வழங்காத இன்பத்தை அள்ளி தரக் கூடியவர் நம்முடைய தலைவாகிய சிவ பெருமான். அவர் நம் ஒவ்வொருவருடைய வீடுகளிலும் எழுந்தருளி உள்ளார். அவனுடைய சிவந்த தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளை பற்றும் அடியவர்களை, ஒரு அரசன் எவ்வாறு தன்னுடைய நாட்டில் உள்ள மக்களில் பாகுபாடு காட்டால் அனைவரையும் சமமாக நடத்தி, காப்பாற்றுவானோ அதே போல் அவரும் தம்முடைய அடியார்களுக்கு அமிர்தத்தை போன்ற இன்பத்தை வழங்குகிறார். அடியவர்களுக்கு அமிர்தத்தை போன்று விளங்கக் கூடிய நம்முடைய தலைவனாகிய சிவனை வணங்கி நலம் பெறுவதற்காக தாமரை மலர்கள் மிதக்கும் குளத்தில் களித்து நீராடி, அவனின் தரிசனத்தை பெற அனைவரும் வாருங்கள்.
விளக்கம் :
இறைவன் கோவிலில் மட்டும் தான் இருக்கிறார் என எண்ணி விட வேண்டாம். அவன் நம்முடைய அனைவரின் வீடுகளிலும், மனங்களிலும் குடியிருக்கக் கூடியவன். இறைவன் அருளை வழங்குவதற்கு எவரிடமும் பாகுபாடு காட்டாதவன். இறைவனின் முன் அனைவரும் சரிசமம். தேவர்களுக்கு ஒரு மாதிரியும், தன்னுடைய பக்தர்களுக்கு ஒரு மாதிரியும், தன்னை நினைக்காதவர்களுக்கு ஒரு மாதிரியும் இறைவன் அருள் செய்வது கிடையாது. மனதார நினைத்து, இருந்த இடத்தில் இருந்து வணங்கினாலே இறைவன் ஓடி வந்து அருள் செய்வான் என்பதை இந்த பாடலில் மாணிக்க வாசகர் விளக்கி உள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}