மார்கழி திருவெம்பாவை பாசுரம் 18 : அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்

Jan 03, 2024,08:39 AM IST

திருவெம்பாவை பாசுரம் 18 :


அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல்

கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்

தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் 

பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.




பொருள் :


வானில் உள்ள தேவர்கள் முதல் அனைவரும் அண்ணாமலையானின் திருவடிகளை அடைவதற்குபணிந்து வணங்குகிறார்கள். அவ்வாறு அவர்கள் வணங்கும் போது அவர்களில் தலைகளில் வைத்திருக்கும் பல விதமான விலை உயர்ந்த மணிகளின் நிகழ்கள் சிவ பெருமானின் பதங்களில் படுகின்றன. சூரியன் வந்தது எப்படி இரவின் இருள் மறைந்து விடுகிறதோ, அதே போல் சிவ பெருமானின் ஒளி பொருந்திய பாதங்களுக்கு முன், தேவர்களின் மகுடங்களில் இருக்கும் விலை உயர்ந்த கற்கள் பிரகாசிப்பது காணாமல் போய் விடுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைத்து உயிர்களுக்கும் சிவ பெருமானே நீக்கமற நிறைந்திருக்கிறார். வானம், பூமி, மண், மரம், வேர் என அனைத்து உயிர்களும் சிவனே நிறைந்திருக்கிறார். அப்படிப்பட்ட பெருமை மிகுந்த அமுதம் போன்று அருளை தரும் ஈசனின் பாதங்களை பணிந்து, புகழ்ந்து பாடிட வேண்டும். அதற்காக இந்த குளத்தில் நிரம்பி இருக்கும் நீரால் பாய்ந்து குளிக்கலாம் வாருங்கள்.


விளக்கம் : 


ஆண், பெண், மரம், செடி ,கொடி என அனைத்து உயிர்களுக்குள்ளும், அனைத்து பொருட்களிலும் இறைனே நிறைந்திருக்கிறான். உண்மையான பக்தியுடன் இறைவனின் பாதங்களை பணியும் போது, நாம் எவ்வளவு உயர்வானவர்கள் என நினைத்துக் கொண்டிருந்தாலும் அந்த ஆணவம் அழிந்து விடும் இறைவனின் திருவடிகளை பணிந்ததும் காணாமல் போய் விடும். நமக்குள் நிறைந்திருக்கும் இறைவனே நம்மை எப்போதும் காக்கக் கூடியவன் என சிவ பெருமானின் பெருமை எடுத்து கூறுகிறார் மாணிக்கவாசகர். திருவெம்பாவை பாடப்பட்ட தலம் திருவண்ணாமலை என்பதால் அதன் பெருமையையும், பார்வதி தேவிக்கு தனது உடலில் பாதியை தந்து, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்ததும் திருவண்ணாமலையில் தான். இந்த சம்பவங்களை குறிக்கும் விதமாகவும் இந்த பாடலை அமைத்துள்ளார் மாணிக்கவாசகர்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்