செக்கச் சிவந்த அழகே.. மருதாணி !

Jun 05, 2025,12:01 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மருதாணியின் நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள் பற்றி பார்ப்போம்...மருதாணி என்றாலே கல்யாண வீடுகளில் "மெஹந்தி விழா "என்று மணப்பெண் மற்றும் சொந்த பந்தங்கள் அனைவருக்கும் கைகளில் பல தரப்பட்ட டிசைன்களில் வைத்துக் கொள்ளும்  அருமையான நிகழ்வில் வைக்கப்படும் அதிசயமான இலை.


இது தெய்வீக மூலிகை வரிசையில் துளசியைப் போன்று மகாலட்சுமி வாசம் செய்யும் மருத்துவ குணம் கொண்ட செடியாகும். இது வீடுகளில் வளர்ப்பது மிகவும் நன்மை பயக்கும்.


மருதாணி பல நன்மைகள் அளிக்கும் ஒரு மூலிகையும், மங்களகரமான செடி ஆகும் .பெண்களுக்கு அழகு சேர்ப்பதிலும், மருத்துவர் ரீதியிலும் பயன்படுகிறது .கைகளில் பச்சை நிறத்தில் மருதாணி அரைத்து வைக்கும் கலவை காய்ந்து அதனை கழுவிய உடன் செக்கச் சிவந்த நிறத்தில் காணப்படும் .அதனை பார்த்தாலே மனதிற்கு மகிழ்ச்சியும் ,அமைதியும் பிறக்கும்.




மருதாணி சிவக்க காரணம்:


மருதாணி சிகப்பாக மாறுவதற்கு காரணம் இதில் உள்ள  "லா சோன்" "(lawsone") என்கிற இயற்கை நிறமி. இது சோலில் உள்ள புரதத்துடன் பிணைந்து சிவப்பாக மாறுகிறது சூரிய ஒளி மருதாணி கையில் வைத்திருக்கும் பொழுது பட்டால் அது நிறமியின் வேதி வினையை தூண்டி நிறத்தை ஆழமாக்குகிறது.


சர்க்கரை தண்ணீர் மருதாணி டிசைன் வைத்த பிறகு அதன் மேல் தடவினால்  விரைவாக நிறம் பிடித்து சிவப்பாக மாறும் .எலுமிச்சை சாறு மருதாணி கலக்கும்போது சேர்ப்பதினாலும்  நிறமியின் வேதி வினையை  தூண்டி நிறத்தை அதிகமாக்கும்.


மருதாணி இலைகள் தசை இறுக்கம் தன்மை கொண்டது .பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கினை தடுக்க உதவுகிறது. பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனையை தடுக்கிறது. ஏனெனில் மருதாணி கைகளில் வைப்பதினால் உடலில் உள்ள உஷ்ணத்தை குறைக்க உதவுகிறது.


மருதாணியின் மருத்துவ பயன்:


மருதாணி இலை நல்ல கிருமி நாசினி. கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது .அடிக்கடி மருதாணி வைத்துக் கொள்வதனால் நகசுத்தி வராமல் தடுக்கும் .உடல் வெப்பம் தணிக்கும் ஆற்றல் உண்டு. நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கிறது. வேனல் கட்டிகள் வந்தாலும் இதனை பூச்சாக வேப்பிலை சேர்த்து அரைத்து பயன்படுத்தும் பொழுது நல்ல பலன் தருகிறது.


ஆனால் இத்தகைய பலன்கள் கடைகளில் விற்கப்படும் மருதாணி கோன் களில் கிடைக்க வாய்ப்பு இல்லை. பெண்களின் கையில் இடும் மருதாணி விரைவில் சிவந்துவிட்டால் அவள் கணவன் மீது அதிக காதல் கொண்டவளாக இருப்பாள் என்றும் ,அவள் கணவனும் அதிக காதலுடன் இருப்பான் என்றும் ,அதனால் தங்கள்  மகளின் வாழ்க்கை சிறப்பாக சந்தோஷமாக இருக்கும் என பெற்றோர் பெருமைப்படுவர்.


மருதாணி நல்ல சிவந்து நிறத்துடன் சிவந்தால் பெண்களுக்கு குழந்தை பிறப்பு சரியான முறையில் இருக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அதிகம் கருத்து விட்டால் அது பித்த உடம்பு என்றும் கூறப்படுகிறது. கைகால் எரிச்சல் ஏற்பட்டால் மருதாணி இலையை அரைத்து உள்ளங்கை கால்களில்  பூசி வர  எரிச்சல் குணமாகும் .ரத்த ஓட்டம் சீராகும். இவற்றின் இலைகள், பட்டை ,மலர் காய் போன்றவை நல்ல மருத்துவ பலன்கள் தருகின்றன.


உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டால் மருதாணி இலை ,வசம்பு, மஞ்சள், கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து தடவி வர குணமாகும். சேற்றுப்புண், கால் நகம் சொத்தை இவற்றிற்கும் நல்ல மருந்தாகிறது. அழகு பராமரிப்புக்கு மருதாணி, மருதாணி இலை  பூச்சு தலைமுடி வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகிறது. பாரம்பரியமாக இந்திய அலங்காரங்களில் மருதாணி பயன்படுத்தப்படுகிறது. இயற்கையாக தலைமுடி கருமைக்கு மருதாணி பொடி தடவி வர இளநரை மற்றும் பொடுகு தொல்லைகள் குறையும். இப்போது உள்ள கணினி உலகத்தில் இளைய தலைமுறையினருக்குள்ள ஒரு பெரும் பிரச்சனை இளநரை ,இதற்கு மருதாணி இலையை கொண்டு இயற்கை முறையில் எளிமையாக தீர்வு காணலாம்.


மருதாணி வைக்க ஏற்ற காலம்:


மருதாணி வியாழன், வெள்ளி ,ஞாயிறு போன்ற நாட்களில் வைப்பது சிறந்தது. மேலும் பஞ்சமி, தசமி ,ஏகாதசி, துவாதசி திதிகளில் பெண்கள் மருதாணி வைப்பது கூடுதல் பலனை தரும். பரணி ,பூரம் ,பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் மருதாணி வைப்பதும் உகந்தது என்று கூறுகிறார்கள்.


இத்தகைய மருத்துவ குணங்களும் ,அழகுக்கும் நன்மை தரும் மருதாணி செடி ஒவ்வொருவர் வீட்டிலும் இருப்பது சிறந்தது. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை

news

விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து

news

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?

news

Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

news

இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்