- மஞ்சுளா தேவி
ராஞ்சி: ஒடிஷா, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் நேற்று முதல் ஒரு தீவிரமான வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் தோண்டத் தோண்ட நோட்டுக்கட்டுக்களாக வருவதால் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை ரூ. 290 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடந்த மிகப் பெரிய வருமான வரி சோதனையாக இது பார்க்கப்படுகிறது. ஒரே சோதனையில் இந்த அளவுக்கு மிகப் பெரிய அளவில் பணக் கட்டுக்கள் சிக்கியிருப்பது இதுவே முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது.
ஒடிஷாவைச் சேர்ந்த மதுபான நிறுவனம் பெளத் சாஹு இன்பிரா. நாட்டின் மிகப் பெரிய மது பான ஆலைகளில் இதுவும் ஒன்று. இந்த நிறுவனம் மிகப் பெரிய அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிரடி சோதனையில் இறங்கியது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான, தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் இருப்பிடங்களில் சோதனைகள் நேற்று தொடங்கின.

3 மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. இன்றும் ரெய்டுகள் தொடர்கின்றன. இதில் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது எது என்றால், தோண்டத் தோண்ட குவிந்து கிடக்கும் பணக் கட்டுக்கள்தான். அந்த அளவுக்கு தனியாக அறைகள் கட்டி அதில் பீரோ பீரோவாக பணத்தை அடுக்கி வைத்துள்ளனர். எல்லாமே 500 ரூபாய் நோட்டுக்களாக இருக்கிறது.
இங்கு கிடைத்துள்ள பணம் எல்லாமே கணக்கில் காட்டப்படாத பணம் என்று கூறப்படுகிறது. இவற்றை எண்ணுவதற்காக 35க்கும் மேற்பட்ட நோட்டு கட்டுக்களை எண்ணும் மெஷின்களை பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை ரூ. 290 கோடி அளவுக்கு பணம் எண்ணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பணம் எண்ண வேண்டியுள்ளதாம். மொத்தம் 176 பண பைகள் சிக்கியுள்ளன. இதில் 46 பைகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளது. மொத்தமும் எண்ணி முடித்தால் மலைக்க வைக்கும் அளவிலான பணமாக அது இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஏழு அறைகள் மற்றும் ஒன்பது லாக்கர்களில் இன்னும் சோதனை நடத்தப்பட உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பௌத் டிஸ்டில்லரி குழும நிறுவனமான பல்தேவ் சாஹு இன்ஃப்ரா மற்றும் டிஸ்டில்லரிக்கு சொந்தமான அரிசி அலுவலகங்களில் இன்று சோதனை நடத்தப்படுகின்றன.
இந்த நிறுவனத்துடன் காங்கிரஸ் எம்.பி. தீரஜ் குமார் சாஹவுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. அவரது இருப்பிடத்திலிருந்தும் ஏராளமான பைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பணப் பறிமுதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். அவர் போட்டுள்ள ட்வீட்டில், இந்தப் பணக்கட்டுக்களை நாட்டு மக்கள் பார்க்க வேண்டும். நமது தலைவர்கள் சிலர் பேசி வரும் யோக்கியமான பேச்சுக்களையும் கேட்க வேண்டும். மக்களிடமிருந்து எதெல்லாம் சூறையாடப்பட்டதோ அவையெல்லாம் மீண்டும் மக்களுக்கே வந்து சேரும். இது மோடியின் உறுதிமொழி என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}