திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவு சம்பவம் தேசிய துயராக மாறியுள்ளது. இதுவரை 47 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நூற்றுக்கணக்கானோர் இன்னும் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த பெரு மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் மேப்பாடி என்ற இடத்திற்கு அருகே மலைப் பகுதியில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்களும், வீடுகளும், கட்டடங்களும், வாகனங்களும் சிக்கிக் கொண்டனர்.

இதுவரை 47 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர், நிவாரணப் பணியாளர்கள் விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்து வருகின்றன. காவல்துறையினர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தீவிரமாக இறங்கியுள்ளனர். ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.
மீட்கப்படுவோர் உடனுக்குடன் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இவரகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி பல கிராமங்கள் உருக்குலைந்து போயுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டிருப்பதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்போர் கூறுகிறார்கள்.
பிரதமர் மோடி இரங்கல்:

அனைத்து அரசுத் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். அமைச்சர்கள் பலரும் சம்பவப் பகுதியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். வயநாடு நிலச்சரிவு குறித்த தகவல்கள் அறிய 9656938689 - 8086010833 ஆகிய உதவி எண்களை மாநில அரசு அறிவித்துள்ளது.
வயநாடு நிலச்சரிவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்பு கொண்டு அவர் பேசியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு முழுமையாக உதவும் என்றும் அவர் அறிவித்தார். அத்தோடு பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீட்டையும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}