அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

Apr 06, 2025,11:24 AM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அதிபர் டிரம்ப் பிரிவினைவாத போக்கில் செயல்படுகிறார். அவரது கொள்கைகள் மக்களையும், நாட்டையும் பிளவுபடுத்துவதாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்துக்கு பேராபத்தை விளைவித்து வருகிறார் டிரம்ப் என்று போராட்டக்காரர்கள் கோபத்துடன் கூறியுள்ளனர். அதிபர் பதவிக்கு அவர் வந்த பிறகு நடைபெற்றுள்ள முதலாவது மிகப் பெரிய போராட்டம் இது என்பதால் பரபரப்பு கூடியுள்ளது.


அதிபர் பதவிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களைக் குறைக்கும் உத்தரவு, வர்த்தக வரிகள், அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்  டிரம்ப். இது பெரும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் பல்வேறு நாடுகளுக்கு டிரம்ப் விதித்த இறக்குமதி வரி விதிப்பு அமெரிக்காவுக்கே எதிராக திரும்பியுள்ளது. அங்குள்ள பங்குச் சந்தைகளில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.




இதன் விளைவாக தற்போது போராட்டங்கள் வெடித்துள்ளன. வாஷிங்டன், நியூயார்க், ஹூஸ்டன், புளோரிடா, கொலராடோ, லாஸ் ஏஞ்சஸ் உள்பட பல்வேறு நகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு பேரணி நடத்தி டிரம்ப்புக்கு தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.


இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஷைனா கெஸ்னர் என்ற ஓவியர் கூறுகையில், நான் கடும் கோபமாக இருக்கிறேன். ஒரு பாலியல் பலாத்கார கும்பல் அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு நாட்டையே ஆட்டிப்படைத்து வருகிறது என்றார் ஆவேசமாக.


தலைநகர் வாஷிங்டனில் பல ஆயிரம் பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அங்குள்ள தேசிய மால் பகுதியில் கூடிய அவர்கள் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து கோஷம் எழுப்பினர்.


டென்வர் நகரில் நடந்த போராட்டத்தின்போது, அமெரிக்காவுக்கு ராஜா தேவையில்லை.. அதிபர்தான் தேவை என்று ஒருவர் ஆவேசமாக குரல் எழுப்பினார்.


அதிபராக டிரம்ப் வந்தது முதலே ஏதாவது சர்ச்சையில் சிக்கி வருகிறார். உக்ரைன் அதிபரை வரவழைத்து செய்தியாளர்கள் முன்பு வைத்து அவரை மிரட்டுவது போல பேசி அசிங்கப்படுத்தினார். உக்ரைனுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்துவோம் என்று கூறினார். காஸாவை முழுமையாக இஸ்ரேல் கைப்பற்றும், அதற்கு நாங்கள் உதவுவோம் என்றார். ஈரான் மீது குண்டு மழை பொழிந்து அதை அழிப்போம் என்றார். தொடர்ந்து இப்படியே அவர் பேசி வருவது சர்ச்சையாகி வரும் நிலையில் தற்போது போராட்டம் வெடித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!

news

கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!

news

கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள‌..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!

news

கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு

news

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை

news

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!

news

கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி

news

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்

news

தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்