சென்னை: சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து கொண்டு, இப்போது தான் கர்ப்பமாகியுள்ள நிலையில் கைவிட்டு விட்டதாக போலீஸில் அவரது 2வது மனைவி ஜாய் கிரிஸில்டா புகார் கொடுத்துள்ள நிலையில், அந்தப் புகாருக்கு மறைமுகமாக பதில் கொடுத்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.
பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஃபேஷன் டிசைனர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கிய பிறகு ஏற்றுக்கொள்ள மறுப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். அது கிறிஸில்டாவுக்கு அவர் அளித்துள் மறைமுகமான பதிலாக பார்க்கப்படுகிறது. நடிகர் பிரேம் குமாரின் மகன் திருமணத்தில் உணவு பரிமாறிய அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். இந்த விஷயம்தான் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள அந்தப் பதிவில், ஒவ்வொரு திருமணமும் சிறப்பானது. ஆனால் சில திருமணங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். நடிகர் பிரேம் அண்ணாவின் மகன் கௌஷிக் சுந்தரம் மற்றும் பூஜிதா கல்யாணராமன் திருமணத்தில் பங்கேற்றது பெருமை. மாதம்பட்டி கேட்டரிங் உணவு மட்டுமல்ல, அன்பையும், ஆசீர்வாதத்தையும் வழங்குகிறது என்று அவர் பதிவிட்டுள்ளார். பதிவில் கமெண்ட் செய்யும் வசதியை அவர் முடக்கி வைத்துள்ளார்.
மறுபக்கம் ஜாய் கிரிஸில்டா ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் மாதம்பட்டி ரங்கராஜ் ஒருவரிடம் பேசுவது போல உள்ளது. அந்த 41 வினாடி வீடியோவில், மாதம்பட்டி ரங்கராஜ், "ஹே, என்ன விஷயம்... பொண்டாட்டி? மிஸ் யூ, லவ் யூ. நான் வீட்டுக்கு போனேன், சாப்பிட்டேன், குளிச்சேன், டிரஸ் மாத்தினேன், திரும்பி வந்துட்டேன். இன்டர்வியூ முடிஞ்சது. எனக்கு 4 மணிக்கு மீட்டிங் இருக்கு, 3.30க்கு கிளம்பிடுவேன். காபி குடிச்சேன்" என்று கூறுகிறார். பிறகு கேமராவை முத்தமிட்டு "டாட்டா" என்று சொல்லி வீடியோவை முடிக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜாய் கிரிஸில்டா விவகாரம் பரபரப்பைக் கூட்டியுள்ளது. அதற்கு முன்னதாக கிறிஸில்டாவுடன் ரங்கராஜ் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதன் பின்னர்தான் இந்த விவகாரம் வெடித்தது நினைவிருக்கலாம்.
இப்படித்தான் சமீபத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 2வது திருமண விவகாரம் புகைப்படத்துடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர் அந்த திருமணத்தை கிட்டத்தட்ட 50 வருட காலம் "பாதுகாப்பாக" வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
பொய்யுரைப்போருக்கான தண்டனையை வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் வழங்குவார்கள்: அன்புமணி ராமதாஸ்
கூட்டணி தொடர்பாகத் தவெக யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை: ஆனந்த் அறிவிப்பு!
தொண்டர்களின் கருத்துகளை பிரதிபலிக்க உள்ளேன்: செங்கோட்டையன் அறிவிப்பு
இந்தியா மீதான வரியை ரத்து செய்யுங்கள்...டிரம்ப்க்கு அதிகரிக்கும் நெருக்கடி
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது...எந்தெந்த பொருட்களின் விலை குறையலாம்?
{{comments.comment}}