May I help You?.. பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா?... அப்ப இந்த செய்தி உங்களுக்கு தான்!

Jul 12, 2024,04:15 PM IST
சென்னை:  சென்னை அண்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவைகளை வழங்க பொதுமக்களுக்கு உதவுவதற்காக May I help you வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் பாஸ்போர்ட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் எப்படி பாஸ்போப்ட் அப்ளை செய்வது, எங்கு யாரை போய் பார்ப்பது, என்ன என்ன கேள்விகள் கேட்கப்படும் என்று தெரியாமல், பலர் புரோக்கர்களை நம்பி ஏமாறும் நிலை அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம். சிலரால்  ரகசிய ஆவணங்களும் தவறுதலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்.



பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடிந்தவரை நீங்களே முயற்சி செய்யுங்கள். அவ்வாறு முயற்சி செய்யும் போது உங்களுக்கு சந்தேகம் வருகிறதா? கவலை வேண்டாம். உங்களுக்காக தான் மே ஐ ஹெல்ப யூ  என்ற புதிய வசதி பாஸ்போர்ட் அலுவலகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. உங்களுடைய சந்தேகங்களை தொலைபேசியிலும் கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் கூறுகையில், பாஸ்போர்ட் சேவைகளில் பொதுமக்களுக்கு உதவுவதற்காக 'நான் உங்களுக்கு உதவலாமா' என்ற சிறப்பு பிரிவு சென்னை அண்ணாசாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சேவை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படுகிறது. இதற்கான தொலைபேசி எண்கள் 044-2851 3639 மற்றும் 044-2851 3640 ஆகிய எண்களில் அழைக்கலாம். 91-73053 30666 என்ற எண்ணிற்கும் வாட்ஸ்அப் செய்து நிவாரணம் பெறலாம். இதே போல் ஆன்லைனில் மட்டுமின்றி பொதுமக்கள் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரியாக சென்று பாஸ்போர்ட் குறித்த சேவை வழிகாட்டுதலைப் பேறலாம்.

அதேபோல, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஒரே ஒரு அதிகாரப்பூர்வ இணையதளம் www.passportindia.gov.in ஆகும். mpossport seva என்ற அதிகாரப்பூர்வ செல்போன் ஆப் மூலமாகவும் செய்ய முடியும். இந்த ஆப் முகவர்கள் மற்றும் ஏமாற்றுக்காரர்களின் வலையில் சிக்காமல் இருக்க நிச்சயம் உதவும். எனவே பொதுமக்கள் பாஸ்போர்ட்டுகளை நேரடியாகவே விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.  

சமீபத்திய செய்திகள்

news

1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!

news

Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!

news

மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!

news

ஹீலியம் கேஸை நுகர்ந்து.. சிஏ மாணவர் எடுத்த விபரீத முடிவு.. டெல்லியை உலுக்கிய சம்பவம்

news

நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.480 உயர்வு

news

ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 30, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

news

பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்